S.J.Suryah - சென்சார் அதிகாரியை அடிக்கப்போன எஸ்.ஜே.சூர்யா?.. நடிப்பு அரக்கனின் இன்னொரு முகம் இதுவா?
சென்னை: S.J.Suryah (எஸ்.ஜே.சூர்யா) நியூ படத்துக்காக சென்சார் அதிகாரியையே எஸ்.ஜே.சூர்யா அடிக்கப்போன சம்பவம் தெரியவந்திருக்கிறது.
கோலிவுட்டில் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் இன்றுவரை பலரது ஃபேவரைட் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்தை வைத்து வாலி படத்தை முதல்முதலாக இயக்கினார். அந்தப் படத்துக்காக அவர் சம்பளமே வாங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அந்தப் படத்தின் மேக்கிங்கிலும், கதையிலும் எஸ்.ஜே.சூர்யாவின் அசுர உழைப்பு வெளிப்பட்டதால் படம் மெகா ஹிட்டானது.

குஷி: வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு விஜய் ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். வாலி படம் போலவே குஷி படமும் மெகா ஹிட்டடிக்க கோலிவுட்டின் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அந்தப் படத்துக்காக முதல்முறையாக லட்சங்களில் அவர் அட்வான்ஸாக வாங்கிய பணத்தில் தனது உதவி இயக்குநர்கள் ஏழு பேருக்கு புது பைக்கை வாங்கிக்கொடுத்தது சமீபத்தில் தெரியவந்து அவருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.
விதை போட்ட சூர்யா: இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தின் துணையோடு சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை எடுப்பது சுலபத்திலும் சுலபமாக மாறிவிட்டது. ஆனால் தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்திலேயே எஸ்.ஜே.சூர்யா நியூ என்ற சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை எடுத்து அதில் வெற்றியும் கண்டார். தொடர்ந்து சில படங்களை இயக்கிய அவர் தற்போது நடிப்பில் பிஸி. அவருக்கு மார்க் ஆண்டனி படத்தில் நடிப்பு அரக்கன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு இப்படத்திலும் கொண்டாடப்படுகிறது.
நியூ: எஸ்.ஜே. சூர்யா இயக்கியிருந்த நியூ படத்தில் சிம்ரன் ஹீரோயினாகவும் எஸ்.ஜே.சூர்யாவே ஹீரோவாகவும் நடித்திருப்பார்கள்.முதலில் அந்தப் படத்தில் அஜித்தும், ஜோதிகாவும்தான் நடிக்க வேண்டியிருந்ததாக கூறப்படுவதுண்டு. ஆனால் ஏதோ காரணங்களால் அவர்கள் விலகிவிட்டார்களாம். இந்த சூழலில் நியூ படத்துக்காக சென்சார் அதிகாரியை எஸ்.ஜே.சூர்யா அடிக்கப்போனதாக கூறப்படுகிறது.
கடுப்பான சூர்யா: அதாவது நியூ திரைப்படம் சைன்ஸ் பிக்ஷன் திரைப்படமாக இருந்தாலும் அதில் அடல்ட் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். படம் சென்சாருக்கு போயிருக்கிறது. அப்போது படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகளில் இருந்த ஒரு பெண்; இந்தப் படத்துக்கு யூ சான்றிதழும் இல்லை; யூ/ஏ சான்றிதழும் இல்லை என சொல்லி எஸ்.ஜே.சூர்யாவை தரக்குறைவாக பேசினாராம். இதனால் கடுப்பான எஸ்.ஜே.சூர்யா தனது கையில் இருந்த செல்ஃபோனை அந்த அதிகாரியின் மீது தூக்கி வீசினாராம். நல்ல வேளையாக அந்த அதிகாரி மீது படவில்லையாம். இதனால் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











