ஜேசன் சஞ்சய் டைரக்டரா ஆகியிருக்கக் கூடாது.. விஜய் மகன் குறித்து எஸ்.ஜே. சூர்யா பளிச்!

சென்னை: நடிகர் விஜய் வைத்து குஷி படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா, நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக ஆகியிருக்கக் கூடாது என சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார்.

லைகா தயாரிப்பில் அடுத்ததாக விஜய் மகன் ஜேசன் சஞ்சய் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். சமீபத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் அறிவித்துவிட்டனர். ஆனால், நடிகர் விஜய்க்கு இந்த விவகாரம் தெரியாது என்கிற பஞ்சாயத்தும் தனியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே இதுவரை நடிகர் விஜய் எந்த ஒரு வாழ்த்தையும் தனது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனர் ஆனதற்கு சொல்லவில்லை என்கின்றனர்.

SJ Suryah believes Actor Vijay son Jason Sanjay will soon turned as a hero

ஜேசன் சஞ்சய் இயக்குநராகி இருக்கக் கூடாது: இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த எஸ் ஜே சூர்யா சஞ்சையை தான் ஹீரோவாக பார்க்கத்தான் ஆசைப்பட்டேன் என்றும் இயக்குநராக ஆவார் என்று நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஒருவேளை இப்போ இயக்குனராக அவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் அமீர்கான் போல அவரும் ஒரு நாள் ஹீரோவாக மாறுவார் என்று நினைக்கிறேன் என எஸ்.ஜே சூர்யா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

அமீர்கான் போல: அமீர்கானும் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக வந்து அதன் பின்னர் இயக்குனராக மாறியவர்தான் என்றும் எஸ் ஜே சூர்யா குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கிய எஸ் ஜே சூர்யா மெர்சல் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார். இந்த ஆண்டு வெளியான விஜயின் வாரிசு படத்திலும் எஸ் ஜே சூர்யா சூப்பரான கேமியோ ரோலில் வந்து கலக்கி இருந்தார். இந்நிலையில் எஸ் ஜே சூர்யா ஜேசன் சஞ்சய் பற்றி கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மீண்டும் இயக்குவேன்: குஷி, வாலி, நியூ, அன்பே ஆருயிரே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா சமீப காலமாக முழு நேர நடிகராகவே மாறிவிட்ட நிலையில், மீண்டும் அந்த டைரக்டர் எஸ்.ஜே. சூர்யாவை எப்போது பார்க்கலாம் என்கிற கேள்விக்கு, கூடிய சீக்கிரமே ஒரு படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் விஷால் நடிப்பில் வெளியாக உள்ள மார்க் ஆண்டனி படத்தில் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே. சூர்யா வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எல் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X