SJ Suryah: தியேட்டரில் செம்ம குத்து குத்திய எஸ்.ஜே. சூர்யா.. மனுஷன் டெடிகேஷன் இருக்கே!
சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து, க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கொம்பனி. இந்த படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போட்டுக் கொண்டு உள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் படத்தில் நடித்த எஸ்.ஜே. சூர்யா சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் நடனம் ஆடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான லவ் இன்சூரன்ஸ் கொம்பனி படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் சில பல காரணங்களால் தள்ளிப்போனது. அதன் பின்னர் ஒரு வழியாக படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியானது. படம் முழுக்க நகைச்சுவை சமகால இளைஞர்களுக்கு ஏற்ற திரைக்கதை அமைப்பு, எஸ்.ஜே. சூர்யாவின் நக்கலும் நையாண்டியும் கலந்த வில்லத்தனம் என மொத்தமாகவே படம் செம்ம கமர்ஷியலாக மாறிவிட்டது.

வரவேற்பு: லவ் இன்சுரன்ஸ் கொம்பனி படம் ஐந்து நாட்களில் ரூபாய் 44 கோடிகள் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதியும் தமிழ் மற்றும் தெலுங்கு என படம் மொத்தமாகவே ரூபாய் 4.15 கோடிகள் தான் வசூலித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. படத்தின் வசூல் மந்தமாகவே சென்றாலும் படக்குழு படத்திற்கான புரோமோசனை கைவிடுவதாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் படக்குழுவினர் தியேட்டர் தியேட்டராக சென்று ரசிகர்களை சந்தித்து படத்தின் புரோமோசனை சிறப்பாக செய்து வருகிறார்கள்.
ஆட்டம் போட்ட எஸ்.ஜே. சூர்யா: இப்படி இருக்கையில் சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை சந்தித்தார். அப்போது தியேட்டரில் அவர் படத்தில் அவர் ஆடிய ஐகானிக் நடனத்தை ஆடிக் காட்டினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலருமே எஸ்.ஜே. சூர்யா மிரட்டுறாருங்க, மனுஷன் எந்த படம் நடிச்சாலும் படத்தின் புரோமோஷனுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யறாருங்க என்று பாராட்டி வருகிறார்கள். தற்போது கமலா தியேட்டரில் எஸ்.ஜே. சூர்யா ஆடிய அவரது ஐகானிக் ஸ்டெப் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











