விடாமுயற்சியில் எஸ்.ஜே. சூர்யா? கையில் ரத்தம் சொட்ட சொட்ட அஜித்.. புது போட்டோ ரிலீஸ்! ரசிகர்கள் குஷி
சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது ஷெட்யூல்ட் நடைபெற்று வருகின்றது. விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்துக்கொண்டு இருப்பதை அறிந்த எஸ்.ஜே. சூர்யா நேரடியாக படத்தின் செட்டிற்குச் சென்று அஜித்தைச் சந்தித்து பேசியுள்ளார்.
ஒரு நாளுக்கு 21 மணி நேரம் வேலை பார்க்கின்றார் அஜித் என அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என கூறப்பட்டு வருகின்றது. அதேபோல் குட் பேட் அக்லி படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. சுரேஷ் சந்திரா மற்றும் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸின் எக்ஸ் பக்கத்தில், விடாமுயற்சி படத்தில் நடித்துள்ள துணை நடிகர்களான நடிகர் அரோவ் , ரெஜினா ஆகியோருக்கு தனித்தனியே போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. ஏற்கனவே அஜித், த்ரிஷா மற்றும் அர்ஜுன் ஆகியோரின் போஸ்டர்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. இதையடுத்து ஆரோவ், ரெஜினா போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பாராட்டு: ஏற்கனவே துணிவு படத்தின் போதும் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில், அவர்களுக்கான போஸ்டர்களும் வெளியிடப்பட்டது. அதேபோல் விடாமுயற்சி படத்திலும் போஸ்டர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். அதேபோல் ஆரவ், ரெஜினா போன்ற துணை நடிகர்களுக்கும் தனி போஸ்டர் வெளியிட்டுள்ளதை ரசிகர்கள் தொடங்கி திரை உலகினரும் வியந்து பார்ப்பதுடன் பாராட்டவும் செய்தனர்.
விடாமுயற்சி: அஜித் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்துக்கொண்டு இருப்பதை அறிந்த எஸ்.ஜே. சூர்யா நேரடியாக படத்தின் செட்டிற்குச் சென்று அஜித்தைச் சந்தித்து பேசியுள்ளார். மேலும் அவருடன் புகைப்படமும் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்துடன், " மிகவும் நீண்ட வருடங்களுக்குப் பின்னர் எனது வழிகாட்டி தலைசிறந்த அஜித்குமார் சாரைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்" என கேப்ஷனிட்டுள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா: மேலும் அந்த புகைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா மிகவும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். படிப்பிடிப்புக்கு மத்தியில் இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளதால் அஜித்குமார் கையில் ரத்தக்கறை உள்ளது. சண்டைக்காட்சிக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கும்போல் தெரிகின்றது. எஸ்.ஜே. சூர்யா தற்போது தெலுங்கு சினிமாக்களிலும் நடித்து வருகின்றார். மேலும் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்திலும் நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எஸ்.ஜே. சூர்யா அஜித்தை சந்திக்கச் சென்றுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

வாய்ப்பு: மேலும் எஸ்.ஜே. சூர்யா தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக முக்கிய காரணம் அஜித்தான் என அவரே பல மேடைகளில் கூறியுள்ளார். எஸ்.ஜே. சூர்யாவின் முதல் படமான வாலி படத்தில் தான் நடிக்க ஒப்புக்கொண்ட அஜித், தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவை ஊக்குவித்தும் வந்துள்ளார். குறிப்பாக வாலி படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர் அஜித், எஸ்.ஜே. சூர்யாவுக்கு வெள்ளை நிற சாண்ட்ரோ காரை பரிசளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











