twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாலி திரைப்படம் ரீமேக் விவகாரம்... உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எஸ்ஜே சூர்யா திட்டம்!

    |

    சென்னை: வாலி திரைப்படம் ரீமேக் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய நடிகரும் இயக்குநருமான எஸ்ஜே சூர்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. இந்தப் படத்தில் நடிகர் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்தார்.

    இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் லீடிங் ரோலில் நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் எஸ்ஜே சூர்யா இயக்குநராக அறிமுகமானார்.

    2 வாரங்களில் 2 கோடி வியூஸ்… விக்னேஷ் சிவன் ஹாப்பி அண்ணாச்சி2 வாரங்களில் 2 கோடி வியூஸ்… விக்னேஷ் சிவன் ஹாப்பி அண்ணாச்சி

    வாலி ரீமேக்

    வாலி ரீமேக்

    இந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் பெற்றுள்ளதாகவும் அடுத்த ஆண்டு இதுதொடர்பான பணிகள் தொடங்கும் என்றும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் புதிய திருப்பமாக தயாரிப்பாளரும் இயக்குனரும் இதுதொடர்பாக சட்டப்படி எதிர்கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பெரிய பிரேக்கை கொடுத்த படம்

    பெரிய பிரேக்கை கொடுத்த படம்

    அதாவது சமீபத்தில் வெளியான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இயக்குனர் எஸ்ஜே சூர்யா இப்போது திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. வாலி திரைப்படம் எஸ்.ஜே. சூர்யாவுக்கு மிகவும் பிடித்த ஒரு படம், ஏனெனில் இது அவரது முதல் படம் மற்றும் அவருக்கு தொழில்துறையில் பெரிய பிரேக்கை கொடுத்த படம்.

    வாலி ரீமேக்கில் நடிக்க ஆர்வம்

    வாலி ரீமேக்கில் நடிக்க ஆர்வம்

    இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதிலும், அஜித் நடிக்க விரும்பாத பட்சத்தில் அதிலும் நடிக்க ஆர்வமாக உள்ளாராம் எஸ்ஜே சூர்யா. இதனால்தான் போனி கபூர் படத்தை ரீமேக் செய்வதை தடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கும் போதே, அவரது இந்தி ரீமேக்கிற்கான வேலையைத் தொடங்குவதற்கு தயாரிப்பாளரை அனுமதித்து நீதிமன்றம் சமீபத்தில் ஒரு தனி இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

    ஆரண்ய காண்டம் தீர்ப்பு

    ஆரண்ய காண்டம் தீர்ப்பு

    இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளார். ஆரண்ய காண்டம் படத்தின் தயாரிப்பாளருக்கு எதிராக இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தாக்கல் செய்த வழக்கில், 2017 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், படத்தின் ஸ்கிரிப்ட்டின் உரிமையை தான் வைத்திருப்பதால் தனக்கு ஃபேவராக தீர்ப்பு வரும் என நம்பிக்கையுடன் உள்ளார் எஸ்ஜே சூர்யா.

    ஸ்கிரிப்ட் ரைட்டருக்கே உரிமை

    ஸ்கிரிப்ட் ரைட்டருக்கே உரிமை

    அந்தத் தீர்ப்பில், படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும், ரீமேக் உரிமை ஸ்கிரிப்ட் ரைட்டருக்கே உரியது என்றும், ஸ்க்ரிப்ட் ரைட்டர் தயாரிப்பாளருக்கு உரிமையை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத பட்சத்தில், ஸ்கிரிப்ட் ரைட்டருக்குதான் ரீமேக் உரிமை உள்ளது என்றும் அந்தத் தீர்ப்பில், நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே, எஸ்.ஜே. சூர்யா, வாலி படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டராக, படத்தை ரீமேக் செய்யும் உரிமையைப் பெற்றிருப்பதால், தனது வழக்கில் நீதி கிடைக்கும் என்று நம்புவதாக கூறப்படுகிறது.

    English summary
    SJ Suryah planing to appeal in Supreme court on Vaalee movie remake issue. Boney Kapoor wants to remake Vaalee movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X