SJ சூர்யாவுக்கு லிப் லாக் கொடுத்த பிரியா பவானி சங்கர்... ரசிகர்களை சூடேற்றிய பொம்மை ட்ரெய்லர்

சென்னை: எஸ்ஜே சூர்யா ஹீரோவாக நடித்த மான்ஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

அதன்பிற்கு தற்போது பொம்மை படத்தில் எஸ்ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியுடன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த ட்ரெய்லரில் எஸ்ஜே சூர்யாவுக்கு பிரியா பவானி சங்கர் கொடுத்த லிப் லாக் கிஸ் வைரலாகி வருகிறது.

 SJ Suryah, Priya Bhavani Shankar starrer Bommai trailer released

எஸ்ஜே சூர்யா - பிரியா பவானி சங்கர் லிப் லாக்: வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்ஜே சூர்யா தற்போது நடிகராக மாஸ் காட்டி வருகிறார். ஹீரோ, வில்லன், காமெடி, சைக்கோ கேரக்டர்கள் என எஸ்ஜே சூர்யாவின் நடிப்புக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு காணப்படுகிறது. இதனையடுத்து தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் எஸ்ஜே சூர்யா பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் நடித்துள்ள பொம்மை திரைப்படம் ஜூன் 16ம் தேதி வெளியாகவுள்ளது. மொழி, அபியும் நானும், பயணம் போன்ற படங்கள் மூலம் பிரபலமான ராதாமோகன், பொம்மை படத்தையும் இயக்கியுள்ளார். இதில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மான்ஸ்டர் படத்திலும் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

 SJ Suryah, Priya Bhavani Shankar starrer Bommai trailer released

இந்நிலையில், நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த பொம்மை திரைப்படம், வரும் 16ம் தேதி ரிலீஸாகிறது. இதனை முன்னிட்டு இந்தப் படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. முக்கியமாக இந்த ட்ரெய்லரில் எஸ்ஜே சூர்யா - பிரியா பவானி சங்கர் இருவரும் லிப் லாக் செய்துகொள்ளும் காட்சி செம்ம வைரலாகி வருகிறது.

 SJ Suryah, Priya Bhavani Shankar starrer Bommai trailer released

செய்தி வாசிப்பாளர், சீரியல் என தனது கேரியரை தொடர்ந்த பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர், ஹோம்லி லுக்கில் மட்டுமே நடித்து வருகிறார். ஆனால், பொம்மை ட்ரெய்லரில் எஸ்ஜே சூர்யாவுக்கு பச்சக் என்று லிப் லாக் கொடுத்துள்ளது ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

ட்ரெய்லரிலேயே லிப் லாக் சீன் என்றால், படத்தில் இன்னும் தரமான சம்பவங்கள் இருக்குமா என பேசி வருகின்றனர். மான்ஸ்டர் படத்தில் நடித்தது முதலே எஸ்ஜே சூர்யாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார் பிரியா பவானி சங்கர். சில மாதங்களுக்கு முன்னர் எஸ்ஜே சூர்யா புதிய BMW கார் வாங்கிய போதும் பிரியா பவானி சங்கர் தான் உடனிருந்தார். பிரியா பவானி சங்கர் இதுவரை மற்ற நடிகர்களுடன் லிப் லாக் காட்சிகளில் நடித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X