கில்லர் படப்பிடிப்பில் உயிரிழந்த தொழில்நுட்பக் கலைஞர்.. இழப்பீடு வழங்கிய SJ சூர்யா

சென்னை: நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வரும் "கில்லர்" திரைப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் நிகழ்ந்த விபத்து திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. படப்பிடிப்பின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு தொழில்நுட்பக் கலைஞர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது வெடிகுண்டு காட்சி ஒன்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததில் 26 வயதான தொழில்நுட்பக் கலைஞர் மதன் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்படி இருக்கும் நிலையில், உயிரிழந்த கலைஞரின் குடும்பத்திற்கு நடிகர் எஸ்.ஜே.சூர்யா இழப்பீடு வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திடீரென குடும்பத்தின் ஆதாரமாக இருந்த நபரை இழந்த சோகத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

SJ Suryah Provides Compensation After Technician s Death on Killer Movie Set

திரையுலகில் பல ஆண்டுகளாக பயணித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, தொழில்நுட்பக் கலைஞர்களுடன் நெருக்கமாக பழகும் நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அதனால் இந்த சம்பவம் அவரையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட இந்த உயிரிழப்பு காரணமாக "கில்லர்" படக்குழுவினரும் சோகத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இழப்பீடு: இந்த நிலையில், உயிரிழந்த கலைஞரின் குடும்பத்திற்கு எஸ்.ஜே.சூர்யா இழப்பீடு வழங்கியிருப்பது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. அதேசமயம், படப்பிடிப்பு தளங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் மேலும் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் திரையுலகினர் மத்தியில் வலுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த இந்த துயர சம்பவம், சினிமா படப்பிடிப்புகளில் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்த மதனின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் இழப்பீடாகவும் நிவாரணமாகவும் வழங்கி உள்ளார்.

வேதனை: மேலும் இந்த விபத்தாலும் தொழில்நுட்பக் கலைஞர் மதனின் மரணத்தாலும் மிகவும் மன வேதனையில் எஸ்.ஜே. சூர்யா இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற மறு அறிவிப்பு குறித்து படக்குழுவினருக்கு இதுவரை அறிவிக்கப்பட்டாமல் இருப்பதால், எஸ்.ஜே. சூர்யாவும் மொத்த படக்குழுவினரும் மிகவும் மன வேதனையில் இருக்கின்றனர் என திரையுலகினர் பேசி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X