செல்வராகவனுக்கு தண்ணி காட்டிய தனுஷ்! ராயன் படப்பிடிப்பில் இப்படியெல்லாம் நடந்துச்சா?

சென்னை: தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக தயாராக உள்ள படம் தனுஷின் 50வது படமான ராயன் படம்தான். இந்த படத்தினை தனுஷ் இயக்கி நடித்தும் உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்ற பல சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பாக படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தினை ஏற்று நடித்துள்ள நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்துள்ளார்.

நடிகர் தனுஷ் தனது 50வது படத்தினை தானே இயக்கி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கி, இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தனுஷ் தனது 50வது படத்திற்கு ராயன் என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தில் தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கியதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

SJ Suryah Raayan Dhanush Selvaraghavan

படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா,பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன், வரலஷ்மி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நாளை அதாவது ஜூலை 21ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகின்றது.

எஸ்.ஜே. சூர்யா: இந்நிலையில் தனியார் யூட்டூப் சேனலுக்கு பேட்டி அளித்த நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா படப்பிடிப்பின்போது நடைபெற்ற பல சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பாக பகிர்ந்துள்ளார். அதில், “ இயக்குநராக தனுஷ் இந்த படத்திற்காக போட்டுள்ள உழைப்பு பலரையும் மிரட்டி விட்டுள்ளது. இயக்குநர் செல்வராகவன் சார் ஒரு காட்சியில் நடிக்கும்போது அவர் ஸ்டைலில் ஒன்றை பண்ணி விட்டார். ஆனால், தனுஷ் அதனை நன்றாக கவனித்து அதனை அப்படியே விடவில்லை, ரீடேக் கேட்டு, தான் விளக்கியதைப் போல நடிக்கச் சொன்னார்.

SJ Suryah Raayan Dhanush Selvaraghavan

ஜீனியஸ்: என்னுடைய தம்பி எனது நடிப்பினில் திருத்தங்கள் கூறுவதா என்று சண்டை போடாமல், தனுஷ் தான் இந்த படத்தின் இயக்குநர் என்பதை மதித்து அவ்ளோ பெரிய ஜீனியஸ் இயக்குநர் செல்வராகவன் மறுபடியும் தனுஷ் என்ன கேட்கிறாரோ அதற்கு தகுந்தது போல நடித்துக் கொடுத்தார். அண்ணன் தானே என்று தனுஷும் சும்மா விடவில்லை. எத்தனை படத்தில் தனுஷை செல்வராகவன் சார் வேலை வாங்கியிருப்பார் என எஸ்.ஜே. சூர்யா அந்த சம்பவத்தை விவரித்த விதம் தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் உலா வருகின்றது.

ஒரு ஃபிரேம் கூட குறையாது: ராயன் படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. முழுக்க முழுக்க பக்கா கேங்ஸ்டர் மூவியாக உருவாகியுள்ள இந்த படத்தினை சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தினை சென்சார் தரப்பில் இருந்து ஏ சர்டிஃபிகேட் கொடுத்துள்ளனர். மேலும் ஒரு சில காட்சிகளை நீக்கிவிட்டு வந்தால் படத்திற்கு யு/ஏ சர்டிஃபிகேட் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் படத்தினை பார்த்த தயாரிப்பாளர் தயாநிதி மாறன், படத்தில் இருந்து ஒரு ஃபிரேமைக் கூட குறைக்க கூடாது என முடிவெடுத்துவிட்டார் எனவும் படம் ஏ சர்டிஃபிகேட்டுடன் ரிலீஸ் செய்யப்படவுள்ளது என தகவல்கள் வெளியானது.

SJ Suryah Raayan Dhanush Selvaraghavan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X