கேம் சேஞ்சர் பட்ஜெட் 500 கோடியா?.. தியேட்டருக்கு வரவங்களுக்கு இந்த விஷயமே போதுமாம் - எஸ்.ஜே. சூர்யா!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்த எஸ்.ஜே. சூர்யா இந்தியன் 3 படத்தில் மெயின் வில்லனாக மிரட்ட காத்திருக்கிறார். மேலும், ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படத்திலும் இவர்தான் அந்த அரசியல்வாதி வில்லன். சமீபத்தில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் கேம் சேஞ்சர் படத்தின் பட்ஜெட் குறித்தும் பாடல்கள் குறித்தும் பேசியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வரும் ஜனவரி 10ம் தேதி உலகம் முழுவதும் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகிறது. சிரஞ்சீவியின் மகனான கேம் சேஞ்சரின் படத்துக்கு சித்தப்பாவும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் எல்லாம் புரமோஷன் செய்துள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நள்ளிரவு 1 மணி காட்சிக்கும் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை சிறப்பு காட்சிகளில் விற்றுக் கொள்ளவும் ஆந்திராவில் தாராளம் காட்டப்பட்டுள்ளது. ஆனால், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தால் நேர்ந்த விபரீதம் காரணமாக தெலங்கானாவில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கிடையாது. தமிழ்நாட்டில் லைகா செய்து வரும் செயல்கள் காரணமாக படமே வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
500 கோடி பட்ஜெட்: பிரம்மாண்டத்துக்குப் பெயர் போன ஷங்கர் ராஜமெளலி, சுகுமார் போல 500 கோடி பட்ஜெட்டில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை உருவாக்கியுள்ளதாக அந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே. சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஷங்கர் சார் கேம் சேஞ்சர் படத்தை மிக பிரம்மாண்டமாக செதுக்கியுள்ளார். 400 முதல் 500 கோடி பட்ஜெட்டில் இப்படியொரு பிரம்மாண்ட படைப்பை மக்கள் தியேட்டருக்கு வந்து பார்த்தாலே ஆச்சர்யத்தில் ஆழ்ந்துவிடுவார்கள் எனக் கூறியுள்ளார்.
டிக்கெட் காசுக்கு இதுவே போதும்: கேம் சேஞ்சர் படத்தில் இடம்பெற்றுள்ள ஜருகண்டி பாடல் ஒன்றே போதும், ஏற்கனவே பாட்டு கொஞ்சம் லீக்கானதால் அதை மேட்ச் செய்ய லிரிக்கல் வீடியோவில் சில விஷயங்களை காட்டியுள்ளனர். ஆனால், சமீபத்தில் அந்த மொத்த பாடலையும் பார்த்து மிரண்டு போய்விட்டேன். கண்டிப்பாக ரசிகர்கள் கொடுக்கும் டிக்கெட்டு காசுக்கு அந்த ஒரு பாடல் மட்டுமே போதும். பாடல்களுக்கு மட்டுமே பல கோடி ரூபாய் செலவு செய்து பிரம்மாண்டமாக ஷங்கர் சார் உருவாக்கியுள்ளார்.
கியாரா அத்வானி: நடிகை கியாரா அத்வானிக்கு கொடுத்த சம்பளத்துக்கு அந்த ஒரு பாடலில் அவர் கவர்ச்சியாக போட்டுள்ள நடனமே போதும் என்கிற அளவுக்கு உள்ளது. பெண் ரசிகைகளை ராம் சரணும், ஆண் ரசிகர்களை கியாரா அத்வானியும் கவர்வது உறுதி என எஸ்.ஜே. சூர்யா புகழ்ந்துள்ளார். கேம் சேஞ்சர் திரைப்படமும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தால் மட்டுமே லாபத்தை அடையும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











