விஜய் யாரோட ரசிகர் தெரியுமா...எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட சுவாரஸ்யமான ரகசியம்

சென்னை : டைரக்டராக இருந்து நடிகரானவர் எஸ்.ஜே.சூர்யா. டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் மார்ச் 5 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில், நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் டிரைலரை பார்த்து விட்டு தனது நடிப்பை விஜய் பாராட்டியது பற்றி தெரிவித்தார். அப்போது அவர், ஐதராபாத்தில் மகேஷ்பாபுவுடன் நடித்த ஸ்பைடர் படத்தின் சூட்டிங்கில் இருந்த போது இரவு 11 மணிக்கு தெரியாத நம்பரில் இருந்து எனக்கு போன் வந்தது.

SJ Suryah reveals what Vijay told him about his acting

யார் என கேட்டதற்கு விஜய் பேசுவதாக கூறினார். அப்போது அவரது போன் சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ஆப் ஆனது. சிறிது நேரத்தில் சார்ஜ் போட்டுவிட்டு, மீண்டும் அதே நம்பரில் இருந்து கூப்பிட்டார்.

என்னால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அது விஜய் தான் என என்னால் நம்ப முடியவில்லை. நான் சேமித்து வைத்திருந்த நம்பரில் இருந்து முற்றிலும் வேறு நம்பராக இருந்தது. ஆனால் நெஞ்சம் மறப்பதில்லை டிரைலரை பார்த்து விட்டு, எனது நடிப்பை மிகவும் பாராட்டினார்.

அதிலும் டிரைலரில் நான் பேசும், ஒரு மனுஷன் எவ்வளோ தான் கஷ்ட படுவான்யா என்ற வசனத்தை கேட்டு மனம் விட்டு சிரித்ததாக கூறினார். விஜய் எனக்கு ரசிகர் என கூறிய வார்த்தை மிகப் பெரிய எனர்ஜியாக இருந்தது என்றார்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி படத்தில் நடித்த விஜய், மெர்சல் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தார். நெஞ்சம் மறப்பதில்லை படம் துவங்கப்பட்டு, 5 ஆண்டுகள் ஆகி விட்டது. ரெஜினா, நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X