2020 காதலர் தினத்துக்கு எஸ்.ஜே. சூர்யாவின் கிஃப்ட் என்ன தெரியுமா?
ராதாமோகன் இயக்கத்தில் நடித்து வரும் எஸ்.ஜே. சூர்யாவின் புதிய படத்திற்கு பொம்மை என தலைப்பிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு காதலர் தினத்துக்கு பொம்மை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் புதிய படம் 2020ம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மான்ஸ்டர் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் பிரியா பவானி சங்கர் எஸ்.ஜே. சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
காதல் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் மற்றொரு நாயகியாக சாந்தினி நடிக்கிறார்.

நடிகராக ஆசை
அஜித்தின் வாலி, விஜய்யின் குஷி என சக்சஸ்ஃபுல் இயக்குநராக களமிறங்கிய எஸ்.ஜே.சூர்யா, தனக்குள் இருந்த நடிப்பு தாகத்தால், அடுத்தடுத்து தான் இயக்கிய படங்களில் தானே ஹீரோவாக களமிறங்கினார்.
ஆரம்பத்தில் ரசிக்கப்பட்ட எஸ்.ஜே.சூர்யாவின் படங்கள், பின்னர் அடல்ட் படங்கள் என்ற முத்திரையுடன் தோல்விகளை சந்திக்க தொடங்கின.

மெர்சல் வில்லன்
கொஞ்ச காலம் தான், ஓரங்கட்டப்பட்டதை அறிந்த எஸ்.ஜே. சூர்யா, ஸ்பைடர் மற்றும் மெர்சல் படங்களில் மிரட்டல் வில்லனாக களமிறங்கி தனது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தினார். அதன் பிரதிபலனாக அவருக்கான புதிய கதைகள் அவரை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டன.

எஸ்.ஜே. சூர்யாவா இது?
ஸ்பைடர் மற்றும் மெர்சல் படத்தில் மிரட்டிய எஸ்.ஜே.சூர்யா, தன்னை டோட்டலாக சாந்த ஸ்வரூபமாக மாற்றிக் கொண்டு எலிக்கு கூட கேடு நினைக்காத மான்ஸ்டர் படத்தில் நடித்து அசத்தினார். அந்த படத்தின் வெற்றி, மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவை ஹீரோவாக மாற்றியுள்ளது.

என்ன கிஃப்ட்?
2020ம் ஆண்டு காதலர் தினத்துக்கு எஸ்.ஜே.சூர்யா கொடுக்கவுள்ள அந்த கிஃப்டுக்கு ‘பொம்மை' என தலைப்பிட்டுள்ளனர். மான்ஸ்டர் படத்தில் பிரியா பவானி சங்கருடன் நடித்த கெமிஸ்ட்ரி அழகாக இருந்ததால், இந்த படத்திலும் அவரே ஜோடியாக இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











