எனக்கும் பிரியாவுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி...விவரித்த எஸ்.ஜே.சூர்யா
சென்னை : டைரக்டரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்திருந்தார். முன்னதாக தான் நடிக்கும் பொம்மை படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க போவதாக கூறி இருந்தார்.
பிறகு கூறுகையில் இந்த படத்திற்கான பாராட்டில் 50 சதவீதம் டைரக்டர் ராதா மோகனுக்கும், மற்றொர 50 சதவீதம் படத்திற்கு இசையமைத்த யுவனுக்கும் போய் சேர வேண்டும் என தெரிவித்தார். அவரது இசையில் படம் அற்புதமாக வந்துள்ளதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த பிரியா பவானிசங்கர் பற்றி ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எஸ்.ஜே.சூர்யா பதிலளித்துள்ளார். ரசிகர்கள் ஒருவர் கேட்டதில், எங்கள் இருவரின் காம்பினேஷனை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள். குஷி படத்துல அவரங்களின் ஈகோ சண்டை செம்மயா இருந்துதுனு எல்லோரும் சொன்னாங்க.
ஆனா அவங்க கெமிஸ்ட்ரி நேச்சுரலா, க்யூட்டா இருக்கும். அத நாம மறக்க முடியாது. பொம்மை படத்துல பிரியா பவானிசங்கரோட உங்க கெமிஸ்ட்ரி எப்படி வந்திருக்கு என கேட்டுள்ளார். மேலும் உங்களின் சமீபத்திய பேட்டிகள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, எங்களின் காம்பினேஷன் காட்சிகள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.
மாநாடு படத்தில் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கி உள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











