12 மணி நேர வொர்க் ஷாப்.. எல்ஐசி சீக்ரெட் சொன்ன எஸ்.ஜே.சூர்யா.. விக்னேஷ் சிவன் ஒரு முடிவோடுதான் இருக்காரோ?
சென்னை: இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் எல்ஐசி என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இதில் பிரதீப் ஆண்டனி, எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது அந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா போட்டிருக்கும் ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் படத்திலேயே சிம்புவை ஹீரோவாக கமிட்டாக்கி கவனம் ஈர்த்தார். அதேபோல் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, நடிகை ஷோபனா என பெரிய ஸ்டார் வேல்யூவுடன் படம் உருவானது. ஸ்டார் வேல்யூ மட்டுமின்றி கதை ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

நானும் ரௌடிதான்: 2012ஆம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து விஜய் சேதுபதி ஒத்துக்கொள்ள நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.
நயன்தாராவுடன் திருமணம்: இந்தப் படத்தில் நடித்தபோதுதான் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினர். பல வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தவர்கள் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களது பெயர்களை சமீபத்தில்தான் நயன்தாரா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
காத்து வாக்குல ரெண்டு காதல்: இதற்கிடையே இருவரது திருமணம் நடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும், விக்னேஷ் சிவன் மேக்கிங் சுத்தமாக எடுபடவில்லை என்றும் ரசிகர்களில் ஒரு தரப்பினர் வெளிப்படையாகவே கூறினர்.
அடுத்த படம்: இந்நிலையில் அவர் தனது அடுத்த படமாக எல்ஐசி என்ற படத்தை இயக்குகிறார். இதில் பிரதீப் ஆண்டனி, எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நயன்தாரா இதில் பிரதீப் ஆண்டனிக்கு அக்காவாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. படத்தின் பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஜே.சூர்யா ட்வீட்: இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்ஐசி, லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற படத்தின் பெயர் எப்படி உற்சாகத்தை தருகிறதோ அதேபோல்தான் படமும் இருக்கும். நேற்று மாலை 3 மணியிலிருந்து அதிகாலை 3 மணிவரை கிட்டத்தட்ட 12 மணி நேரம் எல் ஐசி படத்துக்காக எங்களுக்கு பயிற்சி பட்டறை நடந்தது.
சிறப்பான நேரம்: இயக்குநர் விக்னேஷ் சிவன், நான், பிரதீப் ரங்கநாதன் ஆகிய மூன்று பேரும் நேற்று சிறப்பான நேரத்தை செலவிட்டோம். விக்னேஷ் சிவன் இந்தப் படத்தின் மீது அதிக கவனம் வைத்திருக்கிறார். புதுக்கால காதல் உலகுக்கு எங்களை அழைத்து செல்ல திட்டமிட்டிருக்கிறார்.. இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்துவருகிறது. விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











