SJ Suryah: "கார்த்தி கூட்டணியில் தோல்வி.." ஹிட் கொடுக்க SJ சூர்யாவுடன் இணையும் ராஜூ முருகன்!
சென்னை: குக்கூ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜூ முருகன். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜப்பான் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. கார்த்தி நடித்த இந்தப் படம் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஜப்பான் தோல்வியில் இருந்து மீண்டு வர எஸ்ஜே சூர்யாவுடன் இணையவுள்ளார் ராஜூ முருகன்.
எஸ்ஜே சூர்யாவுடன் இணையும் ராஜூ முருகன்
கோலிவுட்டில் தற்போது வெரைட்டியான ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பது எஸ்ஜே சூர்யா தான். ஹீரோ, வில்லன், காமெடி என கிடைக்கும் எல்லா கேரக்டர்களிலும் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார். கடைசியாக எஸ்ஜே சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இதனைத் தொடர்ந்து எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ள இந்தியன் 2, கேம் சேஞ்சர், தனுஷின் D 50 ஆகிய படங்கள் இந்தாண்டு வெளியாகவுள்ளன. இதுதவிர மேலும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஒரு படத்துக்கு 8 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதும் குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஹிட் இயக்குநர்களைப் போல தோல்வி படங்களை கொடுத்த இயக்குநர்களும் எஸ்ஜே சூர்யாவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர்.
தங்களது படங்களில் எஸ்ஜே சூர்யாவை நடிக்க வைத்து எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என துடித்து வருகின்றனர். இந்த வரிசையில் முதல் ஆளாக இயக்குநர் ராஜூ முருகன் எஸ்ஜே சூர்யாவுடன் இணைகிறார். குக்கூ மூவி மூலம் இயக்குநராக அறிமுகமான ராஜூ முருகன், மேலும் பல படங்களில் வசனகர்த்தா, பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆனால், அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜிப்ஸி, ஜப்பான் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. முக்கியமாக கார்த்தி ஹீரோவாக அவரது 25வது படமாக ஜப்பான், கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து கம்பேக் கொடுக்க காத்திருக்கும் ராஜூ முருகன், இந்தமுறை எஸ்ஜே சூர்யாவுடன் இணைகிறாராம். இந்தப் படத்தை அம்பேத் குமாரின் ஒலிம்பியா ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூகத்தின் முக்கியமான பிரச்சினையை பின்னணியாக வைத்து சோஷியல் மெசேஜ் உள்ள படமாக இது உருவாகவுள்ளதாம். எஸ்ஜே சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருடன் மேலும் சில முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படம் குறித்த அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











