பிரதீப் ரங்கநாதன் படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா லுக்.. ஓஹோ விக்னேஷ் சிவன் கதையே இதுதானா?

சென்னை: நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் உருவாகி வருகிறது. பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் எல்லாம் வெளியாகி தெறிக்கவிட்டது.

இந்நிலையில், எஸ்.ஜே. சூர்யாவின் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளது. தனுஷின் ராயன் படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள நிலையில், தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை நாயகனாகவே எஸ்.ஜே. சூர்யா மாறிவிடுவாரோ என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

LIK SJ Suryah Pradeep Ranganathan

ஹீரோவாக எஸ்.ஜே. சூர்யா நடித்த படங்கள் சரியாக போகாத நிலையில், வில்லனாகவும் குணசித்ர நடிகராகவும் மாறி தற்போது ஸ்கோர் செய்து வருகிறார்.

எஸ்.ஜே. சூர்யா ராஜ்ஜியம்: கோலிவுட்டில் தற்போது படுபிஸியாக இருப்பது எஸ்.ஜே. சூர்யா தான் என்கின்றனர். இந்தியன் 2 படத்தில் நடித்த எஸ்.ஜே. சூர்யா, நேற்று வெளியான தனுஷின் ராயன் படத்திலும் நடித்துள்ளார். அடுத்து இந்தியன் 3, கேம் சேஞ்சர் படங்களிலும் எஸ்.ஜே. சூர்யாவின் அதிரடி காத்திருக்கிறது. இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும் அவர் நடித்துள்ளார்.

எல்ஐகேவில் எஸ்.ஜே. சூர்யா லுக்: ஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடித்ததை போல எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் காதல் இன்சூரன்ஸ் கம்பெனி நடத்தும் கடவுளாக நடித்துள்ளாரா? என்கிற கேள்வி தான் அவருடைய ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தால் எழுகிறது.

இதுதான் கதையா?: இன்னொரு புறம் அந்த மோதிரத்தில் இதயம் செய்வதை எந்திரம் செய்யாது என்கிற வாசகம் இடம்பெற்றுள்ள நிலையில், ஹீரோவாக இருக்கும் பிரதீப் ரங்கநாதனே ரோபோட்டாக இருப்பாரோ என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. எப்படி இருந்தாலும், வித்தியாசமான காதல் கதையை தான் விக்னேஷ் சிவன் இந்த முறை வெயிட்டாக உருவாக்கி வருகிறார் என்பதில் எந்தவொரு டவுட்டும் இல்லை. அஜித் குமாரின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்பு மிஸ் ஆன நிலையில், தரமான கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. லவ் டுடே படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த படமும் வெற்றிப் படமாக அமையுமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X