»   »  "நியூ விவகாரம்: டைரக்டர் சூர்யாவிடம் போலீஸ் விசாரணை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து டைரக்டர் சூர்யா மீதான பழைய வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும்.தேவைப்பட்டால் சூர்யாவிடம் விசாரணை நடத்தப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜ் கூறினார்.வாலி, குஷி படங்களை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமான படம் நியூ. இந்தப் படத்தில்அவருடன் சிம்ரன், கிரண், தேவயானி மற்றும் பலர் நடித்திருந்தனர். கடந்த வருடம் வெளியான இப்படத்தில் ஏராளமானஆபாசக் காட்சிகளும், இரட்டை அர்த்தம் தொணிக்கும் வசனங்களும் இடம் பெற்றிருப்பதாக பெண்கள் அமைப்புகள் குற்றம்சாட்டின.இந்தப் படத்திற்கு முதலில் சென்னையிலுள்ள சென்சார் போர்டு அனுமதி அளிக்கவில்லை சென்சார் போர்டிலிருந்த ஒரு பெண்அதிகாரி, நியூ படத்தில் ஆபாசம் நிறைந்திருப்பதாக கூறி தணிக்கை சான்றிதழ் அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இதையடுத்து அந்த பெண் அதிகாரி மீது கோபத்தில் எஸ்.ஜே. சூர்யா செல்போனை வீசி எறிந்தார் என்று போலீஸில் புகார்கூறப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே தனது படத்திற்கு மும்பை சென்று அங்குள்ள சென்சார் போர்டிடம் சூர்யா அனுமதி பெற்று வந்தார். இதையடுத்துபடம் வெளியானது. இந் நிலையில், பெண் வழக்கறிஞர் அருள்மொழி, நியூ படத்தில் ஆபாசமான, அறுவறுக்கத்தக்க காட்சிகள் ஏராளமாகஇருப்பதாகவும், எனவே படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கற்பக விநாயகம், அசோக் குமார் ஆகியோர் விசாரணையின் ஒரு பகுதியாக நியூ படத்தைபார்த்தனர். இதையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், இப்படிப்பட்ட ஒரு படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ்கொடுத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. இவ்வளவு ஆபாச காட்சிகள், வசனங்களுடன் இப்படத்தைத் திரையிட்டது கலாச்சாரம் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.இப்படத்திற்குக் கொடுத்த தணிக்கை வாரிய சான்றிதழை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற ஒரு படத்தைஎடுத்துள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவை நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. அனுமதி பெறாத காட்சிகளை சுவரொட்டிகளில் பயன்படுத்தியது மற்றும் தணிக்கை வாரிய பெண் உறுப்பினர் மீதுசெல்போனை வீசி அவமானப்படுத்தியது தொடர்பாக சூர்யா மீது உள்ள 2 புகார்களையும் காவல் துறையினர் விரைவாகவிசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.இந் நிலையில், இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜ் கூறுகையில், நியூ படத்தில் சென்சார் போர்டு அனுமதிஅளிக்காத காட்சிகள் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.சினிமாட்டோகிராப் சட்டப்படி நியூ படம் எடுக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய தணிக்கைக் குழு கண்காணிக்க வேண்டும்.அவர்கள் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.நீதிபதிகள் கூறிய தீர்ப்பை முழுமையாகப் படித்த பிறகு முறையான விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்யப்படும். இயக்குனர் சூர்யாவிடம் தேவைப்பட்டால் நேரில் விசாரணை நடத்தப்படும். அவர் மீதான பழையவழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.இதற்கிடையே நீதிமன்றத் தீர்ப்பு குறித்து எஸ்.ஜே. சூர்யா கூறுகையில், நான் நியூவை எப்போதோ மறந்து விட்டேன். தற்போதுஅன்பே ஆருயிரே படத்தின் டப்பிங் வேலைகளில் பிசியாக இருக்கிறேன். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கேள்விப்பட்டதும்எனக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது.ஆனால் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். இதனால் நானும் அந்த தீர்ப்பை மதிக்கிறேன். இந்த தீர்ப்பு குறித்து அப்பீல் செய்வதுகுறித்து நான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார்.

"நியூ விவகாரம்: டைரக்டர் சூர்யாவிடம் போலீஸ் விசாரணை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து டைரக்டர் சூர்யா மீதான பழைய வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும்.தேவைப்பட்டால் சூர்யாவிடம் விசாரணை நடத்தப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜ் கூறினார்.வாலி, குஷி படங்களை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமான படம் நியூ. இந்தப் படத்தில்அவருடன் சிம்ரன், கிரண், தேவயானி மற்றும் பலர் நடித்திருந்தனர். கடந்த வருடம் வெளியான இப்படத்தில் ஏராளமானஆபாசக் காட்சிகளும், இரட்டை அர்த்தம் தொணிக்கும் வசனங்களும் இடம் பெற்றிருப்பதாக பெண்கள் அமைப்புகள் குற்றம்சாட்டின.இந்தப் படத்திற்கு முதலில் சென்னையிலுள்ள சென்சார் போர்டு அனுமதி அளிக்கவில்லை சென்சார் போர்டிலிருந்த ஒரு பெண்அதிகாரி, நியூ படத்தில் ஆபாசம் நிறைந்திருப்பதாக கூறி தணிக்கை சான்றிதழ் அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இதையடுத்து அந்த பெண் அதிகாரி மீது கோபத்தில் எஸ்.ஜே. சூர்யா செல்போனை வீசி எறிந்தார் என்று போலீஸில் புகார்கூறப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே தனது படத்திற்கு மும்பை சென்று அங்குள்ள சென்சார் போர்டிடம் சூர்யா அனுமதி பெற்று வந்தார். இதையடுத்துபடம் வெளியானது. இந் நிலையில், பெண் வழக்கறிஞர் அருள்மொழி, நியூ படத்தில் ஆபாசமான, அறுவறுக்கத்தக்க காட்சிகள் ஏராளமாகஇருப்பதாகவும், எனவே படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கற்பக விநாயகம், அசோக் குமார் ஆகியோர் விசாரணையின் ஒரு பகுதியாக நியூ படத்தைபார்த்தனர். இதையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், இப்படிப்பட்ட ஒரு படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ்கொடுத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. இவ்வளவு ஆபாச காட்சிகள், வசனங்களுடன் இப்படத்தைத் திரையிட்டது கலாச்சாரம் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.இப்படத்திற்குக் கொடுத்த தணிக்கை வாரிய சான்றிதழை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற ஒரு படத்தைஎடுத்துள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவை நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. அனுமதி பெறாத காட்சிகளை சுவரொட்டிகளில் பயன்படுத்தியது மற்றும் தணிக்கை வாரிய பெண் உறுப்பினர் மீதுசெல்போனை வீசி அவமானப்படுத்தியது தொடர்பாக சூர்யா மீது உள்ள 2 புகார்களையும் காவல் துறையினர் விரைவாகவிசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.இந் நிலையில், இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜ் கூறுகையில், நியூ படத்தில் சென்சார் போர்டு அனுமதிஅளிக்காத காட்சிகள் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.சினிமாட்டோகிராப் சட்டப்படி நியூ படம் எடுக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய தணிக்கைக் குழு கண்காணிக்க வேண்டும்.அவர்கள் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.நீதிபதிகள் கூறிய தீர்ப்பை முழுமையாகப் படித்த பிறகு முறையான விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்யப்படும். இயக்குனர் சூர்யாவிடம் தேவைப்பட்டால் நேரில் விசாரணை நடத்தப்படும். அவர் மீதான பழையவழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.இதற்கிடையே நீதிமன்றத் தீர்ப்பு குறித்து எஸ்.ஜே. சூர்யா கூறுகையில், நான் நியூவை எப்போதோ மறந்து விட்டேன். தற்போதுஅன்பே ஆருயிரே படத்தின் டப்பிங் வேலைகளில் பிசியாக இருக்கிறேன். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கேள்விப்பட்டதும்எனக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது.ஆனால் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். இதனால் நானும் அந்த தீர்ப்பை மதிக்கிறேன். இந்த தீர்ப்பு குறித்து அப்பீல் செய்வதுகுறித்து நான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து டைரக்டர் சூர்யா மீதான பழைய வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும்.தேவைப்பட்டால் சூர்யாவிடம் விசாரணை நடத்தப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜ் கூறினார்.

வாலி, குஷி படங்களை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமான படம் நியூ. இந்தப் படத்தில்அவருடன் சிம்ரன், கிரண், தேவயானி மற்றும் பலர் நடித்திருந்தனர். கடந்த வருடம் வெளியான இப்படத்தில் ஏராளமானஆபாசக் காட்சிகளும், இரட்டை அர்த்தம் தொணிக்கும் வசனங்களும் இடம் பெற்றிருப்பதாக பெண்கள் அமைப்புகள் குற்றம்சாட்டின.

இந்தப் படத்திற்கு முதலில் சென்னையிலுள்ள சென்சார் போர்டு அனுமதி அளிக்கவில்லை சென்சார் போர்டிலிருந்த ஒரு பெண்அதிகாரி, நியூ படத்தில் ஆபாசம் நிறைந்திருப்பதாக கூறி தணிக்கை சான்றிதழ் அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.


இதையடுத்து அந்த பெண் அதிகாரி மீது கோபத்தில் எஸ்.ஜே. சூர்யா செல்போனை வீசி எறிந்தார் என்று போலீஸில் புகார்கூறப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தனது படத்திற்கு மும்பை சென்று அங்குள்ள சென்சார் போர்டிடம் சூர்யா அனுமதி பெற்று வந்தார். இதையடுத்துபடம் வெளியானது.

இந் நிலையில், பெண் வழக்கறிஞர் அருள்மொழி, நியூ படத்தில் ஆபாசமான, அறுவறுக்கத்தக்க காட்சிகள் ஏராளமாகஇருப்பதாகவும், எனவே படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கற்பக விநாயகம், அசோக் குமார் ஆகியோர் விசாரணையின் ஒரு பகுதியாக நியூ படத்தைபார்த்தனர். இதையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், இப்படிப்பட்ட ஒரு படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ்கொடுத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.

இவ்வளவு ஆபாச காட்சிகள், வசனங்களுடன் இப்படத்தைத் திரையிட்டது கலாச்சாரம் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.இப்படத்திற்குக் கொடுத்த தணிக்கை வாரிய சான்றிதழை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற ஒரு படத்தைஎடுத்துள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவை நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அனுமதி பெறாத காட்சிகளை சுவரொட்டிகளில் பயன்படுத்தியது மற்றும் தணிக்கை வாரிய பெண் உறுப்பினர் மீதுசெல்போனை வீசி அவமானப்படுத்தியது தொடர்பாக சூர்யா மீது உள்ள 2 புகார்களையும் காவல் துறையினர் விரைவாகவிசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில், இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜ் கூறுகையில், நியூ படத்தில் சென்சார் போர்டு அனுமதிஅளிக்காத காட்சிகள் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.

சினிமாட்டோகிராப் சட்டப்படி நியூ படம் எடுக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய தணிக்கைக் குழு கண்காணிக்க வேண்டும்.அவர்கள் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.


நீதிபதிகள் கூறிய தீர்ப்பை முழுமையாகப் படித்த பிறகு முறையான விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்யப்படும். இயக்குனர் சூர்யாவிடம் தேவைப்பட்டால் நேரில் விசாரணை நடத்தப்படும். அவர் மீதான பழையவழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையே நீதிமன்றத் தீர்ப்பு குறித்து எஸ்.ஜே. சூர்யா கூறுகையில், நான் நியூவை எப்போதோ மறந்து விட்டேன். தற்போதுஅன்பே ஆருயிரே படத்தின் டப்பிங் வேலைகளில் பிசியாக இருக்கிறேன். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கேள்விப்பட்டதும்எனக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

ஆனால் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். இதனால் நானும் அந்த தீர்ப்பை மதிக்கிறேன். இந்த தீர்ப்பு குறித்து அப்பீல் செய்வதுகுறித்து நான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil