எஸ்.ஜே.சூர்யா மீது புது வழக்கு நியூ படத்தின் தணிக்கைச் சான்றிதழை திருப்பித் தராததால், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட நியூ படத்தின் தணிக்கைச் சான்றிதழை சூர்யாவிடமிருந்து திரும்பப்பெறுமாறு சென்னையில் உள்ள தணிக்கைக் குழுவுக்கு மத்திய தணிக்கைக் குழு உத்தரவிட்டது.இதையடுத்து தணிக்கைச் சான்றிதழைத் திருப்பித் தருமாறு சூர்யாவிடம் சென்னை தணிக்கைக் குழு கோரியது. ஆனால் அவர்திருப்பித் தர மறுத்துவிட்டார். இதையடுத்து போலீஸாரின் உதவியுடன் சான்றிதழைப் பெற முடிவு செய்யப்பட்டது.இது குறித்து சென்னை மண்டல தணிக்கை அதிகாரி பாபு ராமசாமி மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை நேரில் சந்தித்துபுகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தணிக்கைச் சான்றிதழைத் திருப்பித் தராத சூர்யா மீது நடவடிக்கை எடுத்து, சான்றிதழைப்பெற்றுத் தருமாறு கோரியிருந்தார்.இதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப் பிரிவுக்கு நடராஜ் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில்மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விரைவில் இந்த வழக்கின் கீழ் சூர்யா மீது நடவடிக்கைஎடுக்கப்படும் எனத் தெரிகிறது.முன் ஜாமீன் மனு தள்ளுபடி:இதற்கிடையே, நியூ படத்தில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளை திரையரங்கில் ஒளிபரப்பியது தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.சென்னை கொரட்டூரில் உள்ள ஒரு திரையரங்கில் நியூ படத்தின் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்பதால் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சூர்யா மனு தாக்கல்செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி தணிகாச்சலம் முன் விசாரைணக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரானவழக்கறிஞர், இந்த வழக்கில் இதுவரை சூர்யா சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து மனுதாரர் மீது வழக்கே பதிவு செய்யப்படாத நிலையில், முன் ஜாமீன் வழங்க இயலாது என்று கூறிமனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

By Staff

நியூ படத்தின் தணிக்கைச் சான்றிதழை திருப்பித் தராததால், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட நியூ படத்தின் தணிக்கைச் சான்றிதழை சூர்யாவிடமிருந்து திரும்பப்பெறுமாறு சென்னையில் உள்ள தணிக்கைக் குழுவுக்கு மத்திய தணிக்கைக் குழு உத்தரவிட்டது.

இதையடுத்து தணிக்கைச் சான்றிதழைத் திருப்பித் தருமாறு சூர்யாவிடம் சென்னை தணிக்கைக் குழு கோரியது. ஆனால் அவர்திருப்பித் தர மறுத்துவிட்டார். இதையடுத்து போலீஸாரின் உதவியுடன் சான்றிதழைப் பெற முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து சென்னை மண்டல தணிக்கை அதிகாரி பாபு ராமசாமி மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை நேரில் சந்தித்துபுகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தணிக்கைச் சான்றிதழைத் திருப்பித் தராத சூர்யா மீது நடவடிக்கை எடுத்து, சான்றிதழைப்பெற்றுத் தருமாறு கோரியிருந்தார்.

இதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப் பிரிவுக்கு நடராஜ் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில்மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விரைவில் இந்த வழக்கின் கீழ் சூர்யா மீது நடவடிக்கைஎடுக்கப்படும் எனத் தெரிகிறது.

முன் ஜாமீன் மனு தள்ளுபடி:


இதற்கிடையே, நியூ படத்தில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளை திரையரங்கில் ஒளிபரப்பியது தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

சென்னை கொரட்டூரில் உள்ள ஒரு திரையரங்கில் நியூ படத்தின் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்பதால் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சூர்யா மனு தாக்கல்செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி தணிகாச்சலம் முன் விசாரைணக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரானவழக்கறிஞர், இந்த வழக்கில் இதுவரை சூர்யா சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மனுதாரர் மீது வழக்கே பதிவு செய்யப்படாத நிலையில், முன் ஜாமீன் வழங்க இயலாது என்று கூறிமனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X