»   »  அ.ஆவுக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்தது!

அ.ஆவுக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்தது!

Subscribe to Oneindia Tamil

நியூ பட சர்ச்சையால் சிக்கி மன அமைதி இழந்திருந்த இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவுக்கு சந்தோஷம் தரும் வகையில், அவரதுஅ..ஆ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது.

நியூ படத்தில் வரலாறு காணாத அளவுக்கு ஆபாசம் இருப்பதாக கூறி அப்படத்தை உயர்நீதிமன்றம் தடை செய்தது.இதுதொடர்பான இன்னொரு வழக்கில் சூர்யா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியிடப்பட்டார்.

இந்த சர்ச்சையில் சிக்கி அவர் படாதபாடு கொண்டிருந்த நிலையிலும், தனது அ..ஆ படத்தை வேகமாக எடுத்து முடித்துதணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைத்தார். சூர்யாவுக்கு ஜோடியாக நிலா நடித்துள்ளார்.இப்படத்தைத் தணிக்கைக் குழுவினர் பார்வையிட்டு 14 இடங்களில் காட்சிகளை வெட்டுமாறும், ஒரு வசனத்தை நீக்குமாறும்சூர்யாவுக்கு அறிவுறுத்தினர்.


தணிக்கைக் குழுவின் அனைத்து உத்தரவுகளையும் அப்படியே நிறைவேற்றினார் சூர்யா. இதைத் தொடர்ந்து அவரது படத்திற்குயுஏ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் பார்க்கக் கூடிய படம் என்று இந்த சான்றிதழுக்கு அர்த்தம்.

முன்னதாக நியூ பட சர்ச்சையால் தனது அ. ஆ படத்தை கன்னாபின்னாவென தணிக்கைகாரர்கள் வெட்டித் தள்ளிவிடுவார்களோஎன்று பயந்த சூர்யா, ஒரு குழுவை அமைத்து, அ.. ஆ படத்தைப் போட்டுக் காட்டி அவர்களின் யோசனைப்படி, ஆபாசமாககருதப்படும் காட்சிகளை அவரே வெட்டி விட்டார். அதிகபட்ச கவனத்துடன் படத்தை திரும்பத் திரும்ப பார்த்த பிறகே அவர்தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைத்தார்.

தணிக்கைச் சான்றிதழ் கிடைத்து விட்டதால் விரைவில் அ..ஆ திரைக்கு வருகிறது.


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil