சுவரொட்டி வழக்கு: நீதிமன்றத்தில் எஸ்.ஜே. சூர்யா சரண்சென்னை: நியூ படத்தில் தணிக்கை செய்யப்பட்ட பாடல் காட்சிகள் அடங்கிய சுவரொட்டிகளை வெளியிட்ட வழக்கில், அப்படத்தின்இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா இன்று சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.நியூ படம் தொடர்பாக சூர்யா மீது தொடரப்பட்டுள்ள இரு வழக்குகளில் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர்ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.அப்படத்தில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டியது தொடர்பான வழக்கில் அவர் முன் ஜாமீன்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.அதை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்னும் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறலாம் எனஉத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் சூர்யா இன்று சென்னை சைதாப்பேட்டை 16வது குற்றவியல் நீதிமன்றத்தில்சரணடைந்தார்.பின்னர் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை:
நியூ படத்தில் தணிக்கை செய்யப்பட்ட பாடல் காட்சிகள் அடங்கிய சுவரொட்டிகளை வெளியிட்ட வழக்கில், அப்படத்தின்இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா இன்று சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நியூ படம் தொடர்பாக சூர்யா மீது தொடரப்பட்டுள்ள இரு வழக்குகளில் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர்ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அப்படத்தில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டியது தொடர்பான வழக்கில் அவர் முன் ஜாமீன்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்னும் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறலாம் எனஉத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் சூர்யா இன்று சென்னை சைதாப்பேட்டை 16வது குற்றவியல் நீதிமன்றத்தில்சரணடைந்தார்.
பின்னர் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Comments


Click it and Unblock the Notifications