அள்ளக்கை வசனம் கட்: எஸ்.ஜே.சூர்யாஅ..ஆ படத்தில் வக்கீலை அள்ளக் கை (எடுபிடி என்று அர்த்தம்) என்று கூறும் வசனத்தை நீக்க இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒப்புக்கொண்டுள்ளார்.சூர்யா, இயக்கி நடித்துள்ள படம் அன்பே ஆருயிரே. இப் படத்தில் வழக்கறிஞர் ஒருவரை ஹீரோவின் நண்பர் அள்ளக்கை என்றுகூறுவதாக ஒரு வசனம் வருகிறது. இந்த வசனம் வழக்கறிஞர்களை மிகவும் அவமானப்படுத்துவதாக இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அன்பே ஆருயிரே படத்தில் ஒரு காட்சியில் வழக்கறிஞர்பாத்திரத்தை சித்தரித்ததில், வழக்கறிஞர்கள் மனம் புண்படுவதாக இருப்பதாக கூறி வழக்கறிஞர் நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,வழக்கும் தொடர்ந்துள்ளனர்.நான் வேண்டும் என்றே அந்தக் காட்சியை வைக்கவில்லை. வழக்கறிஞர் நண்பர்கள் மனம் புண்படும்படியாக அந்தக் காட்சியை நான்வைக்கவில்லை.தெரிந்தோ, தெரியாமலோ அது அவர்களது மனதைப் புண்படுத்தி விட்டதால், படிப்படியாக அந்த வசனத்தை நீக்கி விட ஏற்பாடுசெய்கிறேன் என்று கூறியுள்ளார் சூர்யா.
அ..ஆ படத்தில் வக்கீலை அள்ளக் கை (எடுபிடி என்று அர்த்தம்) என்று கூறும் வசனத்தை நீக்க இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒப்புக்கொண்டுள்ளார்.
சூர்யா, இயக்கி நடித்துள்ள படம் அன்பே ஆருயிரே. இப் படத்தில் வழக்கறிஞர் ஒருவரை ஹீரோவின் நண்பர் அள்ளக்கை என்றுகூறுவதாக ஒரு வசனம் வருகிறது.
இந்த வசனம் வழக்கறிஞர்களை மிகவும் அவமானப்படுத்துவதாக இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அன்பே ஆருயிரே படத்தில் ஒரு காட்சியில் வழக்கறிஞர்பாத்திரத்தை சித்தரித்ததில், வழக்கறிஞர்கள் மனம் புண்படுவதாக இருப்பதாக கூறி வழக்கறிஞர் நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
நான் வேண்டும் என்றே அந்தக் காட்சியை வைக்கவில்லை. வழக்கறிஞர் நண்பர்கள் மனம் புண்படும்படியாக அந்தக் காட்சியை நான்வைக்கவில்லை.
தெரிந்தோ, தெரியாமலோ அது அவர்களது மனதைப் புண்படுத்தி விட்டதால், படிப்படியாக அந்த வசனத்தை நீக்கி விட ஏற்பாடுசெய்கிறேன் என்று கூறியுள்ளார் சூர்யா.


Click it and Unblock the Notifications