twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எஸ்.ஜே.சூர்யாவிடம் விரைவில் விசாரணை: கமிஷ்னர் நியூ பட விவகாரம் தொடர்பாக சென்னை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள 3 வழக்குகள் குறித்து இயக்குனர்எஸ்.ஜே.சூர்யாவிடம் விசாரணை நடத்தப்படும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார்.படு ஆபாசமாகவும், அருவருப்பாகவும் இருப்பதாக கூறி இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த நியூ படத்திற்குவழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் போஸ்டர்களில் இடம் பெற்றது, தியேட்டர்களில் ஒளிபரப்பியதுதொடர்பாக பதிவு செய்ப்பட்டுள்ள 2 வழக்குகள் மற்றும் தணிக்கை வாரிய பெண் உறுப்பினர் மீது செல்போனைத் தூக்கி வீசிரகளை செய்தது தொடர்பான வழக்கு ஆகியவற்றையும் விசாரிக்க வேண்டும் என மாநகர காவல்துறைக்கு உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சூர்யாவை போலீஸார் கைது செய்யக் கூடும் என்று தகவல் பரவியுள்ளது. இந் நிலையில் சூர்யா மீதானவழக்குகளின் நிலை குறித்து ஆணையர் நடராஜ் கூறுகையில், நியூ படம் தொடர்பாக நிலுவையில் உள்ள 3 புகார்கள் குறித்தும்போலீஸார் உரிய முறையில் விசாரிப்பார்கள். குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் சூர்யாவை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தி உயர்நீதிமன்றத்தில் அறிக்கைகொடுப்பார்கள் என்று தெரிவித்தார். அனேகமாக செவ்வாய்க்கிழமையன்று சூர்யாவிடம் விசாரணை நடத்தப்படும் எனத்தெரிகிறது.

    By Staff
    |

    நியூ பட விவகாரம் தொடர்பாக சென்னை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள 3 வழக்குகள் குறித்து இயக்குனர்எஸ்.ஜே.சூர்யாவிடம் விசாரணை நடத்தப்படும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார்.


    படு ஆபாசமாகவும், அருவருப்பாகவும் இருப்பதாக கூறி இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த நியூ படத்திற்குவழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் இந்தப் படத்தில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் போஸ்டர்களில் இடம் பெற்றது, தியேட்டர்களில் ஒளிபரப்பியதுதொடர்பாக பதிவு செய்ப்பட்டுள்ள 2 வழக்குகள் மற்றும் தணிக்கை வாரிய பெண் உறுப்பினர் மீது செல்போனைத் தூக்கி வீசிரகளை செய்தது தொடர்பான வழக்கு ஆகியவற்றையும் விசாரிக்க வேண்டும் என மாநகர காவல்துறைக்கு உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து சூர்யாவை போலீஸார் கைது செய்யக் கூடும் என்று தகவல் பரவியுள்ளது. இந் நிலையில் சூர்யா மீதானவழக்குகளின் நிலை குறித்து ஆணையர் நடராஜ் கூறுகையில், நியூ படம் தொடர்பாக நிலுவையில் உள்ள 3 புகார்கள் குறித்தும்போலீஸார் உரிய முறையில் விசாரிப்பார்கள்.

    குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் சூர்யாவை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தி உயர்நீதிமன்றத்தில் அறிக்கைகொடுப்பார்கள் என்று தெரிவித்தார். அனேகமாக செவ்வாய்க்கிழமையன்று சூர்யாவிடம் விசாரணை நடத்தப்படும் எனத்தெரிகிறது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X