எஸ்.ஜே. சூர்யா கைதாவாரா? உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதிலிருந்து தப்பிக்க, தனது வழக்கறிஞர்களுடன்இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.டைரக்டர் எஸ்.ஜே. சூர்யா இயக்கி, கதாநாயகனாக நடித்த நியூ படத்தில் ஆபாசம் அதிகமாக இருப்பதாக கூறி, சென்னைஉயர்நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. அந்தப் படத்திற்கு சென்சார் போர்டு அளித்த சான்றிதழும் ரத்து செய்யப்பட்டது.தமிழ்ப்பட வரலாற்றில் ஆபாசத்தின் பேரில் ஒரு படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதிப்பதும், சென்சார் சான்றிதழ் ரத்துசெய்யப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.மேலும் சென்சார் போர்டு பெண் உறுப்பினரிடம் தகராறு செய்தது, சென்சார் போர்டு ரத்து செய்த காட்சிகளை விளம்பரமாகப்பயன்படுத்தியது ஆகிய சூர்யா மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை துரிதமாக விசாரிக்கும்படியும் உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து சூர்யா மீது விசாரணை நடத்தப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜ் தெரிவித்தார்.இதனால் சூர்யா விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கைதிலிருந்து தப்பிக்க தனதுவழக்கறிஞர்களுடன் சூர்யா ஆலோசனை நடத்தி வருகிறார்.
உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதிலிருந்து தப்பிக்க, தனது வழக்கறிஞர்களுடன்இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
டைரக்டர் எஸ்.ஜே. சூர்யா இயக்கி, கதாநாயகனாக நடித்த நியூ படத்தில் ஆபாசம் அதிகமாக இருப்பதாக கூறி, சென்னைஉயர்நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. அந்தப் படத்திற்கு சென்சார் போர்டு அளித்த சான்றிதழும் ரத்து செய்யப்பட்டது.
தமிழ்ப்பட வரலாற்றில் ஆபாசத்தின் பேரில் ஒரு படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதிப்பதும், சென்சார் சான்றிதழ் ரத்துசெய்யப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.
மேலும் சென்சார் போர்டு பெண் உறுப்பினரிடம் தகராறு செய்தது, சென்சார் போர்டு ரத்து செய்த காட்சிகளை விளம்பரமாகப்பயன்படுத்தியது ஆகிய சூர்யா மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை துரிதமாக விசாரிக்கும்படியும் உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சூர்யா மீது விசாரணை நடத்தப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜ் தெரிவித்தார்.
இதனால் சூர்யா விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கைதிலிருந்து தப்பிக்க தனதுவழக்கறிஞர்களுடன் சூர்யா ஆலோசனை நடத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications