»   »  நியூ விவகாரம்: எஸ்.ஜே.சூர்யாவை கைது செய்ய பிடிவாரண்ட் திரைப்படத் தணிக்கை வாரியப் பெண் உறுப்பினரை செல்போனால் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர், நடிகர்எஸ்.ஜே.சூர்யாவைக் கைது செய்ய சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.சூர்யா இயக்கி நடித்த நியூ படத்தை சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, சூர்யாமீது நிலுவையில் உள்ள 2 வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அதில் ஒரு வழக்குதான் பெண் தணிக்கை உறுப்பினர் வானதி சீனிவாசன் மீது செல்போனை வீசித் தாக்க முயன்ற வழக்கு. நியூபடத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்பட்ட பின்னர், நடிகை கிரண் ஆடிய ஒரு குத்துப் பாட்டை சேர்க்க முடிவு செய்தசூர்யா, அப்பாடலுக்கு அனுமதி வழங்கக் கோரி தணிக்கை வாரியத்தை அணுகினார்.அப்பாடலைப் பார்த்த பெண் உறுப்பினர் வானதி சீனிவாசன், மிகவும் ஆபாசமாக இப்பாடல் இருப்பதாக கூறி பாடலுக்குஅனுமதி தர மறுத்து விட்டார். இதுதொடர்பாக வாக்குவாதத்தில், கையில் இருந்த செல்போனை எடுத்து வானதி மீது சூர்யாவீசினார். வானதி கீழே குனிந்து கொண்டதால், அடிபடாமல் தப்பித்தார்.இதுதொடர்பான வழக்கு எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கு தற்போதுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இன்று சாட்சிகள் விசாரணை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து சூர்யா இன்று கண்டிப்பாக நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் ஏற்கனவேஉத்தரவிட்டிருந்தார்.ஆனால் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சூர்யா ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஒரு மனுவை அவரது வக்கீல் தாக்கல்செய்தார். அதில், விசாரணையில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு சூர்யா கோரியிருந்தார்.ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, சூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் பிறப்பித்துபோலீஸாருக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து சூர்யாவைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அதற்குள்ளாகவே சூர்யாநீதிமன்றத்தில் சரணடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுதவிர, தணிக்கை செய்த காட்சிகளை படத்துடன் சேர்த்து திரையிட்டது, போஸ்டர்களில் போட்டது தொடர்பாக இன்னொருவழக்கும் சூர்யா மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

நியூ விவகாரம்: எஸ்.ஜே.சூர்யாவை கைது செய்ய பிடிவாரண்ட் திரைப்படத் தணிக்கை வாரியப் பெண் உறுப்பினரை செல்போனால் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர், நடிகர்எஸ்.ஜே.சூர்யாவைக் கைது செய்ய சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.சூர்யா இயக்கி நடித்த நியூ படத்தை சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, சூர்யாமீது நிலுவையில் உள்ள 2 வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அதில் ஒரு வழக்குதான் பெண் தணிக்கை உறுப்பினர் வானதி சீனிவாசன் மீது செல்போனை வீசித் தாக்க முயன்ற வழக்கு. நியூபடத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்பட்ட பின்னர், நடிகை கிரண் ஆடிய ஒரு குத்துப் பாட்டை சேர்க்க முடிவு செய்தசூர்யா, அப்பாடலுக்கு அனுமதி வழங்கக் கோரி தணிக்கை வாரியத்தை அணுகினார்.அப்பாடலைப் பார்த்த பெண் உறுப்பினர் வானதி சீனிவாசன், மிகவும் ஆபாசமாக இப்பாடல் இருப்பதாக கூறி பாடலுக்குஅனுமதி தர மறுத்து விட்டார். இதுதொடர்பாக வாக்குவாதத்தில், கையில் இருந்த செல்போனை எடுத்து வானதி மீது சூர்யாவீசினார். வானதி கீழே குனிந்து கொண்டதால், அடிபடாமல் தப்பித்தார்.இதுதொடர்பான வழக்கு எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கு தற்போதுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இன்று சாட்சிகள் விசாரணை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து சூர்யா இன்று கண்டிப்பாக நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் ஏற்கனவேஉத்தரவிட்டிருந்தார்.ஆனால் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சூர்யா ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஒரு மனுவை அவரது வக்கீல் தாக்கல்செய்தார். அதில், விசாரணையில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு சூர்யா கோரியிருந்தார்.ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, சூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் பிறப்பித்துபோலீஸாருக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து சூர்யாவைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அதற்குள்ளாகவே சூர்யாநீதிமன்றத்தில் சரணடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுதவிர, தணிக்கை செய்த காட்சிகளை படத்துடன் சேர்த்து திரையிட்டது, போஸ்டர்களில் போட்டது தொடர்பாக இன்னொருவழக்கும் சூர்யா மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Oneindia Tamil

திரைப்படத் தணிக்கை வாரியப் பெண் உறுப்பினரை செல்போனால் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர், நடிகர்எஸ்.ஜே.சூர்யாவைக் கைது செய்ய சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

சூர்யா இயக்கி நடித்த நியூ படத்தை சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, சூர்யாமீது நிலுவையில் உள்ள 2 வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதில் ஒரு வழக்குதான் பெண் தணிக்கை உறுப்பினர் வானதி சீனிவாசன் மீது செல்போனை வீசித் தாக்க முயன்ற வழக்கு. நியூபடத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்பட்ட பின்னர், நடிகை கிரண் ஆடிய ஒரு குத்துப் பாட்டை சேர்க்க முடிவு செய்தசூர்யா, அப்பாடலுக்கு அனுமதி வழங்கக் கோரி தணிக்கை வாரியத்தை அணுகினார்.


அப்பாடலைப் பார்த்த பெண் உறுப்பினர் வானதி சீனிவாசன், மிகவும் ஆபாசமாக இப்பாடல் இருப்பதாக கூறி பாடலுக்குஅனுமதி தர மறுத்து விட்டார். இதுதொடர்பாக வாக்குவாதத்தில், கையில் இருந்த செல்போனை எடுத்து வானதி மீது சூர்யாவீசினார். வானதி கீழே குனிந்து கொண்டதால், அடிபடாமல் தப்பித்தார்.

இதுதொடர்பான வழக்கு எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கு தற்போதுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இன்று சாட்சிகள் விசாரணை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து சூர்யா இன்று கண்டிப்பாக நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் ஏற்கனவேஉத்தரவிட்டிருந்தார்.

ஆனால் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சூர்யா ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஒரு மனுவை அவரது வக்கீல் தாக்கல்செய்தார். அதில், விசாரணையில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு சூர்யா கோரியிருந்தார்.


ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, சூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் பிறப்பித்துபோலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சூர்யாவைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அதற்குள்ளாகவே சூர்யாநீதிமன்றத்தில் சரணடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, தணிக்கை செய்த காட்சிகளை படத்துடன் சேர்த்து திரையிட்டது, போஸ்டர்களில் போட்டது தொடர்பாக இன்னொருவழக்கும் சூர்யா மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil