நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டார் எஸ்.ஜே.சூர்யா திரைப்படத் பெண் தணிக்கை உறுப்பினர் வானதி சீனிவாசன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள இயக்குனர்எஸ்.ஜே.சூர்யா நிபந்தனைப்படி சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.நியூ படத்தில் கிரண் இடம் பெற்ற பாடல் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி அதற்கு அனுமதி தர பெண் உறுப்பினர் வானதிசீனிவாசன் மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த சூர்யா, வானதி மீது தனது செல்போனைத் தூக்கி வீசினார்.இதுதொடர்பாக வானதி கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தவழக்கு தொடர்பான விசாரணைக்கு சூர்யா வராத காரணத்தால் அவரைக் கைது செய்ய எழும்பூர் 14வது குற்றவியல் நீதிபதிகோவிந்தராஜன் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து சூர்யாவை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில், சூர்யாவை நிபந்தனைஜாமீனில் நீதிமன்றம் விடுதலை செய்தது.நிபந்தனைப்படி, இன்று காலை 10.30 மணியளவில் எழும்பூர் 14வது நீதிமன்றத்திற்கு சூர்யா வந்தார். பின்னர் நீதிமன்றப்பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்றார்.
திரைப்படத் பெண் தணிக்கை உறுப்பினர் வானதி சீனிவாசன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள இயக்குனர்எஸ்.ஜே.சூர்யா நிபந்தனைப்படி சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.
நியூ படத்தில் கிரண் இடம் பெற்ற பாடல் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி அதற்கு அனுமதி தர பெண் உறுப்பினர் வானதிசீனிவாசன் மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த சூர்யா, வானதி மீது தனது செல்போனைத் தூக்கி வீசினார்.
இதுதொடர்பாக வானதி கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தவழக்கு தொடர்பான விசாரணைக்கு சூர்யா வராத காரணத்தால் அவரைக் கைது செய்ய எழும்பூர் 14வது குற்றவியல் நீதிபதிகோவிந்தராஜன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சூர்யாவை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில், சூர்யாவை நிபந்தனைஜாமீனில் நீதிமன்றம் விடுதலை செய்தது.
நிபந்தனைப்படி, இன்று காலை 10.30 மணியளவில் எழும்பூர் 14வது நீதிமன்றத்திற்கு சூர்யா வந்தார். பின்னர் நீதிமன்றப்பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்றார்.
Comments


Click it and Unblock the Notifications