ஆபாச சுவரொட்டி: சூர்யாவுக்கு முன் ஜாமீன் நியூ படத்தில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளை சுவரொட்டிகளில் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில்இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.நியூ படத்தைத் தடை செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இயக்குனர் சூர்யா மீதான இருவழக்குகளையும் விரைந்து விசாரிக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து தணிக்கைக் குழு பெண் உறுப்பினர்வானதி சீனிவாசன் மீது செல்போனைத் தூக்கி வீசியது தொடர்பான வழக்கில் சூர்யாவை போலீஸார் கைதுசெய்தனர்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சூர்யா நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இந் நிலையில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய சுவரொட்டிகளை வெளியிட்டது தொடர்பாகதொடரப்பட்டுள்ள வழக்கிலும் சூர்யாவைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொள்ள இருந்தனர்.நியூ படத்தில் சிம்ரன் நெஞ்சில் சூர்யா முகம் பதித்திருப்பதைப் போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்தக் காட்சிஆபாசமாக இருப்பதாக கூறி சென்சார் போர்ட் அக்காட்சியைத் தடை செய்தது.ஆனால் இக்காட்சி உள்ளிட்ட மேலும் சில காட்சிகளைக் கொண்டு சுவரொட்டிகள் தயாரித்த சூர்யா அதைசென்னை நகர் முழுவதும் ஒட்டினாார். இதையடுத்து சூர்யா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் தணிக்கைவாரியம் புகார் கொடுத்தது.நியூ படத்தில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய சுவெராட்டிகள் சென்னை நகர் முழுவதும்ஒட்டப்பட்டிருந்தன. இவற்றை தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் கண்டுபிடித்த தணிக்கை வாரியம் சென்னைமாம்பலம் காவல் நிலையத்தில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்தது.இந்தப் புகாரின் பேரில் சூர்யா மீது நடவடிக்கை போலீஸார் முடிவு செய்திருந்தனர்.இதையடுத்து முன் ஜாமீன் கோரி சூர்யாவின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு நீதிபதி தணிகாச்சலம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி சூர்யாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

By Staff

நியூ படத்தில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளை சுவரொட்டிகளில் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில்இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

நியூ படத்தைத் தடை செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இயக்குனர் சூர்யா மீதான இருவழக்குகளையும் விரைந்து விசாரிக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து தணிக்கைக் குழு பெண் உறுப்பினர்வானதி சீனிவாசன் மீது செல்போனைத் தூக்கி வீசியது தொடர்பான வழக்கில் சூர்யாவை போலீஸார் கைதுசெய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சூர்யா நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய சுவரொட்டிகளை வெளியிட்டது தொடர்பாகதொடரப்பட்டுள்ள வழக்கிலும் சூர்யாவைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொள்ள இருந்தனர்.

நியூ படத்தில் சிம்ரன் நெஞ்சில் சூர்யா முகம் பதித்திருப்பதைப் போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்தக் காட்சிஆபாசமாக இருப்பதாக கூறி சென்சார் போர்ட் அக்காட்சியைத் தடை செய்தது.

ஆனால் இக்காட்சி உள்ளிட்ட மேலும் சில காட்சிகளைக் கொண்டு சுவரொட்டிகள் தயாரித்த சூர்யா அதைசென்னை நகர் முழுவதும் ஒட்டினாார். இதையடுத்து சூர்யா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் தணிக்கைவாரியம் புகார் கொடுத்தது.

நியூ படத்தில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய சுவெராட்டிகள் சென்னை நகர் முழுவதும்ஒட்டப்பட்டிருந்தன. இவற்றை தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் கண்டுபிடித்த தணிக்கை வாரியம் சென்னைமாம்பலம் காவல் நிலையத்தில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்தது.

இந்தப் புகாரின் பேரில் சூர்யா மீது நடவடிக்கை போலீஸார் முடிவு செய்திருந்தனர்.

இதையடுத்து முன் ஜாமீன் கோரி சூர்யாவின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு நீதிபதி தணிகாச்சலம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி சூர்யாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X