நியூ விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சூர்யா அப்பீல்? நியூ படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதை எதிர்த்து இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தெரிகிறது.படு ஆபாசமாக இருப்பதாக கூறி நியூ படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தப் படத்திற்குவழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்யுமாறும் திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது (இதுவரை தணிக்கை சான்றிதழ் ரத்து செய்யப்படவில்லை).இதுதவிர, சூர்யா மீது நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளையும் விரைந்துமுடிக்குமாறும் உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.நியூ படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறித்து சூர்யா கூறுகையில், நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகக் கூறியிருந்தார்.தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.ஆனால் தற்போது உச்சநீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்துள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.திங்கள்கிழமை தான் இது குறித்து முழுமையாகத் தெரிய வரும்.இதற்கிடையே தனக்கு எதிராக கோலிவுட்டில் ஒரு கும்பல் ரகசியமாக சதித் திட்டம் தீட்டி தன்னை வம்பு, வழக்குகளில் சிக்கவைத்து வருவதாக தனது நண்பர்களிடம் சூர்யா புலம்பி வருகிறார்.தனக்கு எதிராக காய் நகர்த்துவோர் யார், யார் என்பதைக் கண்டறிய ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியையும் சூர்யாநாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

By Staff

நியூ படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதை எதிர்த்து இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தெரிகிறது.

படு ஆபாசமாக இருப்பதாக கூறி நியூ படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தப் படத்திற்குவழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்யுமாறும் திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது (இதுவரை தணிக்கை சான்றிதழ் ரத்து செய்யப்படவில்லை).

இதுதவிர, சூர்யா மீது நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளையும் விரைந்துமுடிக்குமாறும் உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

நியூ படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறித்து சூர்யா கூறுகையில், நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகக் கூறியிருந்தார்.தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது உச்சநீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்துள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.திங்கள்கிழமை தான் இது குறித்து முழுமையாகத் தெரிய வரும்.

இதற்கிடையே தனக்கு எதிராக கோலிவுட்டில் ஒரு கும்பல் ரகசியமாக சதித் திட்டம் தீட்டி தன்னை வம்பு, வழக்குகளில் சிக்கவைத்து வருவதாக தனது நண்பர்களிடம் சூர்யா புலம்பி வருகிறார்.

தனக்கு எதிராக காய் நகர்த்துவோர் யார், யார் என்பதைக் கண்டறிய ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியையும் சூர்யாநாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Read more about: sj surya appeals in sc?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X