நியூ: தடைக்கு உச்சநீதிமன்றம் தடை! நியூ படத்திற்கு தடை விதித்தும், தணிக்கை சான்றிதழை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தஉத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.நியூ படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஒய்.கே.சபர்வால், கிருஷ்ணா, நலோகர் ஆகியோர்அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.சூர்யா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், நியூ படத்தில் இடம் பெற்ற கதை மற்றும் வசனங்களின் தன்மைகளைஆராய்ந்த பின்னரே திரைப்படத் தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்துள்ளது.இது இயக்குனரின் கிரியேட்டிவிட்டி சம்பந்தமானது. அதை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். அந்தச் சுதந்திரத்தில்தலையிடக் கூடாது. இப்படத்தில் பல காட்சிகளை தணிக்கை வாரியம் நீக்கச் சொன்னது, அதன்படி அக்காட்சிகள்நீக்கப்பட்டு அதன் பின்னரே ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு படம் வெளியானது.ஆட்சேபனைக்குரிய காட்சிகளை உயர்நீதிமன்றம் நீக்கச் சொல்லியிருக்கலாம். அதை விடுத்து படத்தையே தடைசெய்தது சரியல்ல என்று வாதிடப்பட்டது.இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதின்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இடைக்காலத் தடைவிதித்தனர். பின்னர் வழக்கு விசாரணை செப்டம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

By Staff

நியூ படத்திற்கு தடை விதித்தும், தணிக்கை சான்றிதழை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தஉத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நியூ படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஒய்.கே.சபர்வால், கிருஷ்ணா, நலோகர் ஆகியோர்அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

சூர்யா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், நியூ படத்தில் இடம் பெற்ற கதை மற்றும் வசனங்களின் தன்மைகளைஆராய்ந்த பின்னரே திரைப்படத் தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்துள்ளது.

இது இயக்குனரின் கிரியேட்டிவிட்டி சம்பந்தமானது. அதை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். அந்தச் சுதந்திரத்தில்தலையிடக் கூடாது. இப்படத்தில் பல காட்சிகளை தணிக்கை வாரியம் நீக்கச் சொன்னது, அதன்படி அக்காட்சிகள்நீக்கப்பட்டு அதன் பின்னரே ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு படம் வெளியானது.


ஆட்சேபனைக்குரிய காட்சிகளை உயர்நீதிமன்றம் நீக்கச் சொல்லியிருக்கலாம். அதை விடுத்து படத்தையே தடைசெய்தது சரியல்ல என்று வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதின்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இடைக்காலத் தடைவிதித்தனர். பின்னர் வழக்கு விசாரணை செப்டம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Read more about: sc withholds ban on new
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X