SK 16: பங்கும், பங்கும் ஒன்னு கூடிட்டாங்கய்யா, கூடிட்டாங்கய்யா
சென்னை: எஸ்.கே. 16 படத்தில் சிவகார்த்திகேயன், சூரி வெற்றிக் கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி உள்ளிட்டோர் நடிக்கும் எஸ்.கே. 16 பட வேலைகள் பூஜையுடன் துவங்கியுள்ளது. விஷாலின் துப்பறிவாளன் படத்தை அடுத்து அனு நடிக்கும் தமிழ் படம் எஸ்.கே. 16.

இந்நிலையில் படப்பிடிப்பு நல்லபடியாக துவங்கியது குறித்து பாண்டிராஜ் ட்வீட் செய்தார். அதை பார்த்த சூரி பதிலுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
சூரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அண்ணன் @pandiraj_dir
தம்பி @Siva_Kartikeyan
என எங்கள் கூட்டு குடும்பம் ,
அனைவரின் ஆசியுடன் எல்லோரையும் சந்தோசப்படுத்தும் #SK16 என தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி என்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கூட்டணி ஆகும். அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர்ந்திருப்பதால் நகைச்சுவை திருவிழாவை எதிர்பார்க்கலாம். பங்கும், பங்கும் சேர்ந்து என்ன கூத்து எல்லாம் அடிக்கப் போகிறார்களோ.
எஸ்.கே. 16 படத்தில் யோகிபாபு, பாரதி ராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே. சுரேஷ் ஆகியோரும் உள்ளனர். பாண்டிராஜின் மெரினா படம் மூலம் தான் சிவகார்த்திகேயன் ஹீரோ ஆனார். கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை அடுத்து தற்போது மூன்றாவது முறையாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.


Click it and Unblock the Notifications











