கார்த்தி உடன் மோத தயாரான சிவகார்த்திகேயன்.. டைட்டிலே அறிவிக்காமல் எஸ்கே 20 ரிலீஸ் தேதி வெளியீடு!
சென்னை: ஜதி ரத்னலு படத்தை இயக்கிய இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள தமிழ், தெலுங்கு பைலிங்குவல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 78 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. உலகளவில் அதன் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது.
இந்நிலையில், உடனடியாக அடுத்த படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார் சிவகார்த்திகேயன் என்பதே அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.

டாப் டக்கரு டான்
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தியது. டான் படத்தை பார்த்து ரஜினிகாந்த் போன் செய்து பாராட்டிய நிலையில், நேரில் சென்று அவரது ஆசிர்வாதத்தையும் நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கிய புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.

சூப்பர் ஹிட் ஜதி ரத்னலு
நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தயாரிப்பில் இயக்குநர் கே.வி. அனுதீப் இயக்கத்தில் வெறும் 4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 70 கோடி வசூல் செய்த சூப்பர் ஹிட் படம் ஜதி ரத்னலு. நவீன் பொலிஷெட்டி, ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான அந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அந்த படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் எஸ்கே 20 படம் உருவாகி உள்ளது.

டைட்டிலே வைக்கல
சிவகார்த்திகேயனின் எஸ்கே 20 படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஆனால், அந்த அறிவிப்பில் கூட படத்தின் தலைப்பு என்பதை ரிவீல் செய்யவில்லை. விரைவில் படத்தோட டீசருடன் டைட்டில் வெளியாகுமா? அல்லது ஃபர்ஸ்ட் லுக்குடன் டைட்டில் வெளியாகுமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரிலீஸ் எப்போ
வரும் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் முதல் பைலிங்குவல் திரைப்படமான எஸ்கே 20 ரிலீஸ் ஆகப் போகும் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. டான் வெளியான உடனே 3 மாதங்களுக்குள் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் வெளியாகப் போவது தமிழ் சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

கார்த்தியுடன் கிளாஷ்
ஆகஸ்ட் 31ம் தேதி கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகி உள்ள விருமன் திரைப்படமும் ரிலீசாகப் போவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நாளில் போட்டிக்கு களமிறங்கி உள்ளார் சிவகார்த்திகேயன். தீபாவளிக்கு சர்தார் படத்துடன் அஜித்துடன் மோத தயாரான கார்த்தி சிவகார்த்திகேயன் உடன் விநாயகர் சதுர்த்தியிலும் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் ஜெயிப்பா
கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஹீரோ மற்றும் தம்பி படம் மூலம் மோதியுள்ளனர். ஆனால், இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில், மீண்டும் இருவரும் மோத உள்ள நிலையில், யார் வெற்றி பெறுவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. நல்ல திரைக்கதையுடன் இரு படங்களும் வெளியானால் இரண்டுமே வெற்றி பெறும், செப்டம்பர் 1ம் தேதி பாக்ஸ் ஆபிஸில் யார் டாப் என தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











