SK 21: பூஜையுடன் தொடங்கிய SK 21... கிளாப் அடித்த கமல்... நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன், அயலான் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

ஆனால், மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் SK 21 படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

கமலின் ராஜ்கமல் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அப்டேட் தற்போது அபிஸியலாக வெளியாகியுள்ளது.

 SK 21: Sivakarthikeyan and Sai Pallavi starrer SK21 shooting began with a pooja

SK 21 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்: டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் ரொம்பவே பிஸியாகிவிட்டார். கடந்தாண்டு டான், பிரின்ஸ் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர், 2023ல் மாவீரன், அயலான் படங்களை களமிறக்கவுள்ளார். ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகவிருந்த மாவீரன் ரிலீஸ் தேதி மாற்றப்படும் எனத் தெரிகிறது. அதேநேரம் அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

மாவீரன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் பிஸியாகிவிட்டார். அதன்படி சிவகார்த்திகேயனின் 21வது படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், SK 21 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

 SK 21: Sivakarthikeyan and Sai Pallavi starrer SK21 shooting began with a pooja

சென்னையில் நடைபெற்ற SK 21 படத்தின் பூஜையில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி, ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர்கள் மகேந்திரன், கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராகவும் SK 21 படத்தின் தயாரிப்பாளராகவும் நடிகர் கமல்ஹாசனும் இந்த பூஜை விழாவில் பங்கேற்றார். அவரை படக்குழுவினர் வரவேற்றனர்.

இதனையடுத்து நடைபெற்ற SK21 பூஜையை சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜிவி பிரகாஷ், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர். அதேபோல், SK 21 படப்பிடிப்பை கமல்ஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். டேக் 1 என கமல் கூற, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆக்‌ஷன் என்றதும் SK 21 படப்பிடிப்பு தொடங்கியது. இதனையடுத்து சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் எழுதுவதைப் போல முதல் காட்சி படமாக்கப்பட்டது.

 SK 21: Sivakarthikeyan and Sai Pallavi starrer SK21 shooting began with a pooja

கெளதம் கார்த்திக் நடித்த ரங்கூன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. ஆக்‌ஷன் டிராமாவாக வெளியான ரங்கூன் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அவரது இயக்கத்தில் SK 21 திரைப்படம் உருவாகுவதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் SK 21 பூஜை விழாவின் பின்னணியில் ஒலித்த பிஜிஎம் கவனத்தை ஈர்த்துள்ளது. இறுதியாக 'அன்பே சிவம்' என கமல் படத்தின் டைட்டிலில் முடிவது குறிப்பிடத்தக்கது.

இதனால், SK 21 பீல் குட் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜிவி பிரகாஷ், ராஜ்குமார் பெரியசாமி என புதிய கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது. முக்கியமாக SK 21 படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பதால் ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே SK 21 படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X