SK 21: லியோவுக்குப் போட்டியாக SK 21 அப்டேட்... மீண்டும் அயலான் ரிலீஸ் கவலையில் சிவகார்த்திகேயன்..?
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் ஜூலை 14ம் தேதி வெளியானது.
மாவீரன் வெளியாகும் முன்பே SK 21 படப்பிடிப்பில் கலந்துகொண்டார் சிவகார்த்திகேயன்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், SK டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியீடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
SK 21 ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் அப்டேட்: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு டான், பிரின்ஸ் திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதன் தொடர்ச்சியாக மாவீரன் படத்தில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். மடோன் அஸ்வின் இயக்கிய இந்தப் படம் கடந்த 14ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
மாவீரனைத் தொடர்ந்து தனது 21வது படத்தில் பிஸியாகிவிட்டார் சிவகார்த்திகேயன். அதன்படி கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சிவகார்த்திகேயனின் SK 21 படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். காஷ்மீரில் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
SK 21 படத்திற்காக ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ள சிவகார்த்திகேயன், அது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக கேப் உடன் வலம் வருகிறார். மேலும் இந்தப் படம் ராணுவ பின்னணியில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், SK படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் வெளியாவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி, SK படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் இரண்டுமே சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதே தினத்தில் விஜய்யின் லியோ படத்தில் இருந்து அர்ஜுனின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல், சிவகார்த்திகேயனின் அயலான் டீசரும் வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அதுகுறித்தும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது அயலான் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லை என்பதால், ஏற்கனவே சொன்னபடி தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அயலான் படத்தை திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என சிவகார்த்திகேயன் & டீம் கடுமையாக முயற்சித்து வருகிறார்களாம். இதுகுறித்து விரைவில் மீண்டும் ஒரு அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











