SK 21: அதிரடி காட்டப் போகும் சிவகார்த்திகேயன்... SK 21 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்..?

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான மாவீரன், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலை நெருங்கியது.

இதனால் சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

 SK 21: Sivakarthikeyans SK 21 First Look Expected Next Week

SK 21 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்..?: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் நிரந்தரமாக இடம் பிடித்துவிட்டார் சிவகார்த்திகேயன். முதல் நாள் ஓபனிங், பாக்ஸ் ஆபிஸ் வசூல், ரசிகர்களிடம் வரவேற்பு என சிவகார்த்திகேயன் படங்கள் தொடர்ந்து மாஸ் காட்டி வருகின்றன. 2022ல் டான், பிரின்ஸ் படங்கள் வெளியான நிலையில், இந்தாண்டு மாவீரன் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இதனையடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 21வது படமான இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். விக்ரம் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் படங்கள் தயாரித்து வரும் கமல், சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஆஃபர் கொடுத்தது கோலிவுட்டில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்காலிகமாக எஸ்கே 21 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். அதேபோல், முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாவீரன் வெளியாகும் முன்பே, எஸ்கே 21 ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. இரண்டு மாதங்கள் வரை காஷ்மீரில் நடைபெற்ற முதற்கட்ட ஷூட்டிங், கடந்த வாரம் நிறைவுப் பெற்றது.

அதேநேரம் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கெட்டப் மாற்றி வித்தியாசமான லுக்கில் நடித்து வருகிறார். தனது ஹேர் ஸ்டைல் கூட தெரியக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும், ஜிம்மில் ஒர்க்அவுட் செய்த சிவகார்த்திகேயனின் போட்டோ சில தினங்களுக்கு முன்னர் டிவிட்டரில் வைரலானது. இதனால் சிவகார்த்திகேயனின் லுக் இப்படித்தான் இருக்கும் என ரசிகர்கள் அவர்களாகவே யூகம் செய்து வருகின்றனர்.

எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு ரொம்பவே சீக்ரெட்டாக நடந்தாலும் படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இதனால், விரைவில் எஸ்கே 21 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இது எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் எஸ்கே 21 படத்தின் டைட்டிலையும் படக்குழு அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது. அதன்படி அடுத்த வாரமே எஸ்கே 21 படத்தின் டைட்டில், சிவகார்த்திகேயன் ஃபர்ஸ்ட் லுக் இரண்டும் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக சிவகார்த்திகேயனின் லுக் செம்ம மிரட்டலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மாவீரன் சூப்பர் ஹிட்டான அதே வேகத்தில் எஸ்கே 21 அப்டேட்டையும் அடுத்தடுத்து வெளியிடவிருப்பது, படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X