SK 23: ஷூட்டிங் ரெடியான சிவகார்த்திகேயன் - AR முருகதாஸ்... சர்ச்சைகளுக்கு நடுவில் SK 23 அப்டேட்!
சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது SK 21 படத்தில் நடித்து வருகிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் தொடர்ச்சியாக ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.
SK 23 என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங், டிசம்பரில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
சர்ச்சைகளுக்கு நடுவில் SK 23 அப்டேட்
சின்ன திரையில் இருந்து சினிமாவில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். செகண்ட் ஹீரோ, காமெடியனாக கேரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார். ஜூலை மாதம் வெளியான மாவீரன், சிவகார்த்திகேயனுக்கு நல்ல கம்பேக் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது SK 21 படத்தில் நடித்து வருகிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. SK 21 ஷூட்டிங் முடிந்ததும் தனது 23வது படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் தர்பார் தோல்விக்குப் பின்னர், படம் இயக்கும் வாய்ப்பு இல்லாமல் காணப்பட்டார் ஏஆர் முருகதாஸ்.
ஆனால், எதிர்பாராதவிதமாக சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் கூட்டணி கன்ஃபர்ம் ஆனது. சிவகார்த்திகேயன் கேரியரில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் படமாக SK 23 இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே கடந்த சில தினங்களாக சிவகார்த்திகேயன் குறித்த சர்ச்சை வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் டி இமான், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், இனிமேல் அவரது படங்களுக்கு இசையமைக்கவே மாட்டேன் எனவும் பேட்டி கொடுத்திருந்தார். டி இமானின் இந்த பேட்டி சிவகார்த்திகேயன் கேரியரையே காலி செய்யும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுபற்றி சிவகார்த்திகேயன் இன்னும் எவ்வித விளக்கம் கொடுக்காமல் சைலண்டாகவே இருந்து வருகிறார்.
இதனையடுத்து SK 23 படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்கிவிடலாம் என சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளாராம். அதன்படி டிசம்பர் மாதமே SK 23 ஷூட்டிங் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டி இமானின் சர்ச்சைகளில் இருந்து திசை திருப்ப SK 21 டைட்டில் அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என கோலிவுட்டில் தகவல்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











