SK 26 Update: அடுத்த அதிரடிக்கு தயாரான சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது? அவரே சொல்லிட்டாரே
சென்னை: தமிழ் சினிமாவில் 'டான்' ஆக வலம் வரும் சிவகார்த்திகேயன், இன்று கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாக வெறும் கமர்ஷியல் படங்கள் மட்டும் இல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வருகின்றன. இப்படி இருக்கையில், தனது அடுத்த படம் குறித்த ஒரு மாஸ் அப்டேட்டை சிவகார்த்திகேயனே சொல்லி உள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தந்தை ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல், தனது சொந்த உழைப்பால் இன்று இந்த உயரத்தை எட்டியுள்ளார். விஜய் தொலைக்காட்சி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக அறிமுகமாகி, பின்னர் தொகுப்பாளராகப் புகழ்பெற்றார். தொலைக்காட்சி அனுபவம் அவருக்குப் பெரிய திரையில் நுழைய உதவியாக இருந்தாலும், ஆரம்பத்தில் அவரும் பல கேலிகளைச் சந்தித்தார்.
"தொலைக்காட்சியில் இருந்து வந்தவனுக்கு எல்லாம் சினிமா ஒரு கேடா?", "இவன் முகமெல்லாம் ஹீரோ முகமா?" என்று ஆரம்பத்தில் பலர் விமர்சனம் செய்தார்கள். ஆனால், அந்த விமர்சனங்களை எல்லாம் தனது நகைச்சுவையாலும், கடின உழைப்பாலும் தவிடுபொடியாக்கி இன்று 'சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை' ரசிக்கும் நாயகனாக உயர்ந்து நிற்கிறார்.

நிறைவான பராசக்தி: தனது 25-வது படமான 'பராசக்தி' (SK 25) படத்தில் மிக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை நெகிழ வைத்தார். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான அந்தப் படம், ஓடிடியிலும் தற்போது பட்டையைக் கிளப்பி வருகிறது. அமரன் படத்தை எனது தாய் நாட்டிற்காகவும், பராசக்தி படத்தை எனது தாய் மொழிக்காகவும் நடித்தது பெருமையாகவும் திருப்தியாகவும் இருப்பதாக தெரிவித்தார்.
அடுத்த பட அப்டேட்: இவரது அடுத்த படத்தின் அப்டேட் எப்போது வரும் என்ற தகவலுக்காக அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயனை பொது வெளியில் சந்தித்த போது, சார் உங்களது 26 படம் குறித்த அப்டேட் எப்போது வரும் என்று கேள்வி எழுப்ப, உடனே, அடுத்த வாரம் வரும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் 41ஆவது பிறந்த நாள் என்பதால், அந்த தேதியில் படத்தின் அப்டேட்டை வெளியிட திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த அப்டேட்டிற்கான ப்ரோமோ வீடியோ படமாக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications