ஜன நாயகனோடு மோதும் பராசக்தி?.. SK கையில் எதுவுமே இல்லையாம்.. சினிமாவில் நடக்கும் அரசியல் விளையாட்டு!

சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது உருவாகி வரும் படங்களில் இரண்டு படங்களின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அது விஜய் நடிக்கும் ஜன நாயகன் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி. இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல் இரண்டு படங்களும் இருவரது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக உள்ளது. இந்நிலையில் இரண்டு படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுகள் அடிபடுகிறது.

அதாவது விஜய்க்கு இந்த படம் அவரது சினிமா வாழ்க்கையில் கடைசி படம். அதன் பின் முழுக்க முழுக்க அரசியலில் அவர் களமிறங்கவுள்ளதால், இந்த படத்தின் பெயர் போஸ்டர்கள் என அனைத்துமே, அரசியலாகத்தான் உள்ளது. மேலும் இந்தப் படத்தை கே.வி.என் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஹெச். வினோத் இயக்கி வருகிறார். படத்தை முதலில் படக்குழு இந்த ஆண்டு அக்டோபரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டது.

Parasakthi Vijay Jana Nayagan Sivakarthikeyan

ஆனால், இப்போது பேச்சுகள் முற்றிலும் மாறி நிற்கிறது. அதாவது, படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்தால், விஜய்யின் தேர்தல் அரசியலிலும் இந்த படம் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பராசக்தி: இது ஒரு புறம் இருக்க சிவகார்த்திகேயன் நடிக்கும் படமான பராசக்தி படம், தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கும் இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது. படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இது சிவகார்த்திகேயனுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மதராஸி, தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் 24 வது படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பராசக்தி என வெற்றி மீது வெற்றிகளை அடுக்க ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார்.

Parasakthi Vijay Jana Nayagan Sivakarthikeyan

ஜன நாயகன்: அப்படி இருக்கும்போது, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ஜன நாயகன் படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்ற தகவலைத் தெரிந்து கொண்ட சிவகார்த்திகேயன், இந்த ஆண்டு இறுதிக்குள்ளோ, அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பின்னர், படத்தை ரிலீஸ் செய்ய டான் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார் என்ற தகவல் வந்தது. சிவகார்த்திகேயன் என்னதான் சொன்னாலும், சினிமாவில் நடக்கும் அரசியல் விளையாட்டை அவரால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அவர் உள்ளாராம்.

Parasakthi Vijay Jana Nayagan Sivakarthikeyan

அரசியல் விளையாட்டு: அதாவது ஜன நாயகன் படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் அந்த படத்திற்கு எதிராக பராசக்தி படத்தை ரிலீஸ் செய்ய ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. அதாவது, டான் பிக்சர்ஸ் நிறுவனம் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கு மிகவும் நெருக்கமான தயாரிப்பு நிறுவனம். மேலும் டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களை, ரெட் ஜெயிண்ட் நிறுவனம்தான் ரிலீஸ் செய்து வருகிறது. இப்படி இருக்கும்போது, ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆகும்போது, பராசக்தி படத்தை தமிழ்நாடு முழுவதும் அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க சினிமா மட்டும் இல்லாமல் அனைத்திலும் அரசியல் விளையாட்டு அதிகரிக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X