அடுத்த ஆக்ஷனுக்கு தயாரான சிவகார்த்திகேயன்.. ஹீரோ டிரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் டிரைலர் வரும் டிசம்பர் 13ம் தேதி காலை 8 மணிக்கு சத்யம் திரையரங்கில் வெளியாகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், வில்லனாக பாலிவுட் நடிகர் அபய் தியோல் மற்றும் சிவகார்த்திகேயனின் குருவாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார்.
புரொமோஷன் கிங் கே.ஜே.ஆர்
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்திற்கு மிக பிரம்மாண்டமாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பிளே ஹீரோ கேம் வெளியிட்ட நிலையில், தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஹீரோ மாஸ்க்கின் ஏ.ஆர். ஃபில்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீங்களும் ஹீரோ ஆகலாம்
கேமராவில் தோன்றும் ஹீரோ மாஸ்க்குடன் எடுக்கும் செல்ஃபி புகைப்படங்களை இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நீங்களும் ஹீரோ ஆகலாம் என பதிவிட்டு வருகின்றனர்.
டிரைலர் எப்போ
ஹீரோ படத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ள நிலையில், ஹீரோ படத்தின் டிரைலர் வரும் டிசம்பர் 13ம் தேதி காலை 8 மணிக்கு சத்யம் சினிமாஸில் வெளியிடப்படுகின்றது. கே.ஜே.ஆர். நிறுவனம் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆன்லைனில் எப்போ?
சத்யம் சினிமாஸில் காலை 8 மணிக்கு ஹீரோ டிரைலர் திரையிடப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆன்லைனில் காலை 11:03க்கு ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பாடல்கள் ஹிட்
யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகியுள்ள ஹீரோ பட பாடல்கள் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான ஓவரா ஃபீல் பண்றேன் பாடல், இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications











