சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்னிக்கு சிவராத்திரிதான்! #SK12FLtonight

By Vignesh Selvaraj

Recommended Video

'SK12' சிவகார்த்திகேயன் சமந்தா டூயட்..வீடியோ

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 12-வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ட்ஸ்ட் லுக், அவரின் பிறந்த நாளான பிப் 17-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய படங்கள் வெளியாகின.

இந்நிலையில், மூன்றாவது படமாக இந்த இருவர் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'SK12' படத்தின் டைட்டில் இன்று நள்ளிரவு அறிவிக்கப்பட இருக்கிறது.

சிவகார்த்திகேயன் - பொன்ராம்

சிவகார்த்திகேயன் - பொன்ராம்

ஏற்கெனவே, சிவகார்த்திகேயன் - பொன்ராம் காம்போவில் ரிலீஸான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'ரஜினி முருகன்' ஆகிய படங்கள் ஹிட்டானது. இந்நிலையில் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் பொன்ராமுடன் இணைந்துள்ளார்.

பொன்ராம் படம்

பொன்ராம் படம்

இந்தப் படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்திற்கென சமந்தா பிரத்யேகமாக சிலம்பாட்டப் பயிற்சி கற்றுக்கொண்டார்.

சிம்ரன் நடிக்கிறார்

இந்தப் படத்தில் சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக்

சிவகார்த்திகேயனின் 12வ-து படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரின் பிறந்த நாளான பிப் 17-ம் தேதி நள்ளிரவு வெளியிடப்படும் என 24AM ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆக, இன்று சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு சிவராத்திரி தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X