Don't Miss!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சயின்ஸ் ஃபிக்ஷன் படத்துக்கு முன்பு காமெடி படம்.. சிவாகார்த்திகேயன் - ராஜேஷ் படம் ஷூட்டிங்!
Recommended Video
சென்னை : பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் இணைந்து 'சீமராஜா' படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து 'இன்று நேற்று நாளை' படத்தின் டைரக்டர் ரவிகுமார் ராஜேந்திரன் இயக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தில் நடிக்க கமிட் ஆனார்.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரகுல் பிரீத் சிங் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கருணாகரன், யோகிபாபு ஆகியோர் காமெடியன்களாக நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படாத நிலையில் அடுத்த படத்திலும் கமிட் ஆகிவிட்டார் சிவா.
'பாஸ் என்கிற பாஸ்கரன்' இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவா. இப்படத்தின் ஷூட்டிங் நேற்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. ரவிகுமாரின் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்திலும், ராஜேஷின் காமெடி கமர்ஷியல் படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்கிறார் சிவா.
It’s official 😊Next film wit @rajeshmdirector sir and @StudioGreen2 @kegvraja sir😊 Can certainly say that we will put in our best effort to entertain you all 🙏 pic.twitter.com/fXeP7iECwF
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 2, 2018
இப்படத்தில் சிவகார்த்திகேயனோடு சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் யாரென இன்னும் அறிவிக்கப்படவில்லை. 'வேலைக்காரன்' படத்தில் சிவா ஜோடியாக நடித்த நயன்தாரா இப்படத்திலும் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார். முன்பே, ஞானவேல்ராஜா தயாரிப்பில் நடிக்க சிவா ஒப்புக்கொண்டநிலையில் பல்வேறு படங்களால் தள்ளிப்போனது. தற்போது காமெடி டைரக்டர் ராஜேஷின் படத்தில் இணைந்துள்ளனர்.