SK 26 First Look: துப்பாக்கியைத் தூக்கி ஓரம் வை.. சிவகார்த்திகேயன் கையில் வீச்சரிவாள்.. வேற லெவல்ல இருக்கே

சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த அமரன் படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இந்த படம் கடந்த 2024 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இன்னும் சொல்லப்போனால் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் 100 நாட்கள் திரையில் ஓடிய படம் அமரன். அதுவும் ஓடிடியில் படம் வெளியான பின்னரும் படம் தியேட்டரில் ஓடியது.

சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் அமரன் மிகவும் முக்கியமான படம். இப்படி இருக்கையில் மீண்டும் கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நேற்றே வெளியானது. இந்நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 16ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் படக்குழு தரப்பில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இந்த படத்திற்கு சேயோன் என்று படக்குழு பெயரிட்டுள்ளது.

SK26 First Look Release Sivakarthikeyan Join Hands With Kamal Haasan RKFI For SK Seyon Movie

படத்தை தாய் கிழவி படத்தின் இயக்குநர் செல்வகுமார் முருகேஷன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வீரம் உண்டு வெற்றி உண்டு சேயோன் என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய வீச்சரிவாளுடன் அமர்ந்துள்ளார். அதுவும் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு, மயில்களுக்கு நடுவே திருநீறு இட்டு, திலகம் வைத்து நமது ஊர் ஐய்யனார் போல அமர்ந்துள்ளார். ஆனால் அவரைச் சுற்றி மயில்களும் படத்திற்கு சேயோன் என்று பெயரிட்டுள்ளதால், தமிழ் கடவுள் முருகனை சித்தரிக்கும் கதாபாத்திரத்தைத்தான் சிவகார்த்திகேயன் ஏற்று நடிக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

பராசக்தி: சிவகார்த்திகேயனின் கடைசிப் படமான பராசக்தி கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படத்தின் கதை மற்றும் திரைக்கதை பலராலும் பாராட்டப் பட்டது. மேலும் படத்திற்கு திட்டமிட்டு நெகடிவ் விமர்சனம் பரப்பட்டதாக படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா குற்றம் சுமத்தி இருந்தார்.

நம்பிக்கை: பராசக்தி சிவகார்த்திகேயனின் 25ஆவது படம். இப்படி இருக்கையில் தனது 26ஆவது படத்தை இயக்குநர் செல்வகுமார் முருகேஷன் உடன் பணியாற்ற சிவகார்த்திகேயன் முடிவு எடுக்க காரணமே, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படமான தாய் கிழவி படத்தின் இயக்குநர் தான் செல்வகுமார் முருகேஷன். இப்படி இருக்கையில் தாய் கிழவி படம் கட்டாயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர். மேலும் ஒரு தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் திருப்தியையும் இயக்குநர் உருவாக்கி விட்டதால், அவரது அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனே நடிக்க முடிவெடுத்த கதைதான் சேயோன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X