»   »  விக்ரம், தமன்னாவின் 'ஸ்கெட்ச்' படம் - லேட்டஸ்ட் அப்டேட்!

விக்ரம், தமன்னாவின் 'ஸ்கெட்ச்' படம் - லேட்டஸ்ட் அப்டேட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விக்ரம், தமன்னா ஆகியோர் நடித்துள்ள 'ஸ்கெட்ச்' திரைப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

விஜய்சந்தர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் டப்பிங் பணி தொடங்காமல் இழுத்துக் கொண்டே போனது.

இப்படத்தின் டப்பிங் பணி இன்று தொடங்கியுள்ளது. மேலும் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்கெட்ச்

ஸ்கெட்ச்

'கலைப்புலி' எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடிக்கும் படம் 'ஸ்கெட்ச்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக டப்பிங் பணியைத் தொடங்க நினைத்தனர்.

 விக்ரம் பிஸி

விக்ரம் பிஸி

விக்ரமோ, கௌதம் மேனன் இயக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிக்க வெளிநாட்டுக்குப் போய்விட்டார். பின்னர் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியாமல் மாதக்கணக்கில் இழுத்துக் கொண்டே போனதால் ஸ்கெட்ச் படப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

 டப்பிங் லேட்

டப்பிங் லேட்

தொடர்ந்து தனது மகளின் திருமண வேலையில் பிஸி ஆனார் விக்ரம். இந்நிலையில், பல மாத தாமதத்துக்குப் பிறகு இந்தப் படத்தின் டப்பிங் வேலைகள் இன்று துவங்கியது. இன்று விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் நடைபெற்றது.

 டிசம்பரில் ரிலீஸ்

டிசம்பரில் ரிலீஸ்

டப்பிங் மற்றும் இதர போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை குறுகிய காலத்தில் முடித்து இப்படத்தை டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளனர். விக்ரம் நடிப்பில் கடைசியாக 'இருமுகன்' படம் சென்ற ஆண்டு செப்டம்பரில் வெளியானது. ஒரு வருடத்திற்குப் பிறகு வெளிவரும் இந்தப் படத்தை விக்ரம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

English summary
The dubbing works of the film began today after a few months late after the shooting of 'Sketch' starring Vikram and Tamanna directed by Vijaychandar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil