150 டான்சர்கள், 1500 நடிகர்கள் - பிரமாண்ட 'அச்சி புச்சி ஸ்கெட்சு...' பாடல்!
Recommended Video

சென்னை : 'ஸ்கெட்ச்' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் இந்தப் படம் மூலம் முதன்முறையாக இணைந்திருக்கிறார்கள்.
திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார் விஜய் சந்தர். இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ், மதுமிதா, வேல ராமமூர்த்தி, ஸ்ரீமன், மலையாள நடிகர் ஹரீஷ் எனப் பலர் நடிக்கிறார்கள்.

ஏற்கனவே வெளியான போஸ்டர், டீஸர் என விக்ரமின் லுக் அனைவரையும் கவர்ந்தது. விக்ரம் பாடிய 'கனவே கனவே' சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.
இப்படத்தில் 'அச்சி புச்சி ஸ்கெட்சு' என்ற பிரமாண்டமான பாடல் ஒன்று இடம்பெறுகிறது. இந்தப் பாடலுக்கு விக்ரமுடன் 150 டான்சர்கள் நடனமாடுகிறார்களாம். 1500 துணை நடிகர்களும் பங்கேற்றிருக்கிறார்களாம்.

இந்தப் பெரிய குழு பங்குபெறும் பாடலை தஸ்தாகீர் இயக்குகிறாராம். தமன் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











