»   »  "சிவ சிவா".. வேண்டாம்ப்பா.. தொடர்ந்து தவிர்க்கும் "ஒல்லி"!

"சிவ சிவா".. வேண்டாம்ப்பா.. தொடர்ந்து தவிர்க்கும் "ஒல்லி"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் வளர்த்து விட்ட காமெடி நடிகரை ஒல்லி நடிகர் தொடர்ந்து தவிர்த்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த அந்த சிவமான காமெடி நடிகர் வெற்றிக்கொடி நாட்டக் காரணமே ஒல்லி நடிகர்தான்.

காமெடி நடிகரை வைத்து தனது அடுத்தடுத்த படங்களை தயாரித்த நடிகர் நாளடைவில் மேற்படி நடிகரின் மார்க்கெட் உச்சத்தில் செல்லவும் அவரைக் கழற்றி விட்டார்.

மேலும் அவரை வைத்து படம் தயாரிக்கும் அளவிற்கு தனது நிறுவனம் இல்லை என்றும் மனம் வெம்பினார். இந்நிலையில் சென்னையில் சமீபத்தில் நடந்த பொங்கல் திருவிழாவிற்கு ஒல்லி நடிகர் செல்வதாக இருந்ததாம்.

ஆனால் கடைசி நேரத்தில் காமெடி நடிகர் வருகிறார் என்று தெரிந்தவுடன் அந்த இசை விழாவிற்குச் செல்வதையே தவிர்த்து விட்டாராம் ஒல்லி நடிகர்.

தற்போது கோலிவுட்டின் பரபரப்பான பேச்சுகளில் ஒன்றாக இந்த விஷயம் மாறியிருக்கிறது. முதலில் காமெடி பின்னர் இசையமைப்பாளர் என்று வரிசையாக ஒல்லி நடிகர் கழற்றி விடுவது குறிப்பிடத்தக்கது.

இந்த கழற்றி விடும் வரிசையில் அடுத்து யார் இணையப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

English summary
Recently Comedy Hero Attend one Music Function In Chennai. The Skinny Actor Know this Information, he is Refrained this Function Immediately.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil