என்னைப் போல கணவனுக்கு இது சரியான செருப்படி.. சில்லுக்கருப்பட்டியை பார்த்து கதறிய மாஸ்டர் ரைட்டர்!
சென்னை: ஆடை படத்தின் இயக்குநரும் மாஸ்டர் படத்தின் ரைட்டருமான இயக்குநர் ரத்னகுமார் சில்லுக்கருப்பட்டி படத்தை பார்த்து நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.
ஹலீத் ஷமீம் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 27ம் தேதி வெளியான சில்லுக்கருப்பட்டி படம் பல பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்து வெற்றி நடை போட்டு வருகிறது.
4 பருவ காதல்களை அழகியல் உணர்வோடு எதார்த்தமாக எடுத்துக் கூறி பலரையும் காதலிக்க வைத்து வரும் சில்லுக்கருப்பட்டி படத்தை சமீபத்தில் பார்த்த ரத்னகுமார் வெகுவாக பாராட்டியுள்ளார்.
சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, முத்தலாக், என்.ஐ.ஏ. கைவிட நாம் தமிழர் கட்சி பொதுக்குழு வலியுறுத்தல்

மாஸ்டர் ரைட்டர்
மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார், கடந்த ஆண்டு அமலா பால் நடிப்பில் ஆடை என்ற படத்தை இயக்கி இந்திய திரையுலகயே திரும்பி பார்க்க வைத்தார். தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திற்கு திரைக்கதை எழுதும் பணியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

நியூ இயர் விடுமுறை
மாஸ்டர் பட பிசியில் இருந்த ரத்னகுமார், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சில்லுக்கருப்பட்டி படம் பார்த்துள்ளார். படத்தை பார்த்த அவர், இயக்குநர் ஹலீதா ஷமீம் மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
செருப்படி
இயக்குநர் ஹலீதா ஷமீமுக்கு வாழ்த்துக்கள். படம் முடித்து வீட்டிற்கு சென்றதும் மனைவியை கட்டிப் பிடிக்க வைத்து மன்னிப்பு கேட்டேன். என்னைப் போல கணவன்மார்களுக்கு இந்த படம் ஒரு செருப்படி என பதிவிட்டுள்ளார்.

சுனைனாவுக்கு வாழ்த்து
நடுத்தர வயது மனைவியாக சில்லுக்கருப்பட்டி படத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நடிகை சுனைனாவுக்கு தொடர்ந்து பாராட்டு மழை குவிந்து வருகிறது. இயக்குநர் ரத்னகுமாரும், தனது ட்விட்டர் பதிவில், சுனைனா தமிழ் சினிமா கண்டுகொள்ளாத திறமையான நடிகை என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
நீங்க நல்ல கணவர் தான்
ரத்னகுமாரின் இந்த ட்வீட்டை பார்த்த சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலீதா ஷமிம், கண்டிப்பாக நீங்க நல்ல கணவர் மற்றும் சிறந்த தந்தை என்பதை நான் அறிவேன். ஆடை படத்தின் ஷூட்டிங்கின் போதே, குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்றேன் என நீங்கள் போட்ட ட்வீட்டை நான் பார்த்துள்ளேன் என ஹலீதா பதிலளித்துள்ளார்.
செகண்ட் லுக் அப்டேட்
ரத்னகுமார் ஆன்லைனுக்கு வந்தவுடனே தளபதி ரசிகர்கள் அவரை சூழ்ந்துக் கொண்டு தலைவா மாஸ்டர் செகண்ட் லுக் அப்டேட் கொடுங்க என கேட்டு வருகின்றனர்.
இறைவிக்கும் இதுதான் சொன்னாரு
இறைவி படத்தை பார்த்த பிறகு இயக்குநர் ரத்னகுமார் இதே டயலாக்கை தான் சொன்னார் என பழைய ரெக்கார்டுகளை கிளறி எடுத்து இந்த நெட்டிசன் போட்டு கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











