ஸ்லம்டாக் படத்தில் நடித்த சிறுவன்-சிறுமி வீடு எரிந்து சாம்பல்!

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் மும்பை குடிசை பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அசாரூதீன், ரூபினா ஆகியோர் நடித்திருந்தனர்.
அவர்களுடைய வீடு மும்பை பாந்த்ரா ரெயில் நிலையம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் இருந்தது. இந்த படத்தில் நடித்த பிறகு அவர்கள் புகழ் பரவியது. பின்னர் படத் தயாரிப்பாளர் இருவருக்கும் மும்பையில் வீடு வாங்கி கொடுத்தார்.
அந்த வீட்டுக்கு அவர்கள் குடியேறி விட்டார்கள். இந்த நிலையில் நேற்று இரவு பாந்த்ரா குடிசை பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அதில் அசாருதீன், ரூபினா ஆகியோரின் முந்தைய வீடுகள் உள்பட ஏராளமான வீடுகள் சாம்பலாகி விட்டன.
இதில் சிக்கி 9 பேர் காயம் அடைந்தனர். 15 தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை கட்டுப்படுத்தின. மும்பை மத்திய ரெயில்வே துறைமுக பாதையில் ரெயில் போக்குவரத்து பலமணி நேரம் நிறுத்தப்பட்டது.
ஆனாலும் தங்களுக்கு உதவ யாருமே வரவில்லை என்று சிறுமி ரூபினா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











