Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- News விடாமல் விரட்டும் எல்நினோ தாக்குதல்.. சென்னையில் மழை வருமா? அப்டேட் வந்தாச்சு
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கல்யாணம் ஆகாமலே கர்ப்பமான ஸ்லம்டாக் மில்லியனர் நாயகி.. வைரலாகும் பேபி பம்ப் போட்டோஸ்!
சென்னை: ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் நாயகி ஃப்ரீடா பின்டோ கர்ப்பமாக உள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
மும்பையில் பிறந்து வளர்ந்த ஃப்ரீடா பின்டோ ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தால் தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
தனது காதலருடன் கடந்த 2019ம் ஆண்டு நிச்சயம் முடிந்த நிலையில், இன்னமும் அவருக்கு திருமணம் ஆகாதது குறிப்பிடத்தக்கது.
கோல்டன் பின் குத்திய வெர்சேஸ் உடை.. ஹாலிவுட் நடிகைகளுக்கு பிறகு ஊர்வசி தான் போட்டு இருக்காராம்!..
ஸ்லம்டாக் மில்லியனர்
கடந்த 2008ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குநர் டேனி பாயல் இயக்கத்தில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்தது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 2 ஆஸ்கர் விருதுகளை அந்தப் படத்திற்கு இசையமைத்து தட்டித் தூக்கினார். தேவ் பட்டேல் மற்றும் நாயகி ஃப்ரீடா பின்டோ ஆகிய இருவரும் உலக பிரபலம் அடைந்தனர்.
ஹாலிவுட் படங்கள்
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த ஃப்ரீடா பின்டோ தொடர்ந்து ஹாலிவுட் படங்கள், வெப் தொடர்கள் என நடித்து கலக்கி வருகிறார். இம்மார்டல்ஸ், ரைஸ் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ், லவ் சோனியா, மோக்ளி, லவ் மேரேஜ் என ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
தேவுடன் பிரேக்கப்
ஸ்லம்டாக் மில்லியனர் பட ஹீரோ தேவ் பட்டேலை காதலித்து வந்த ஃப்ரீடா பின்டோ ஆறு ஆண்டு கால காதல் வாழ்க்கைக்கு பிறகு அவரை பிரேக்கப் செய்தார். இருவரும் பரஸ்பரம் தங்களது பிரேக்கப்பை அறிவித்து உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
காதலருடன் நிச்சயம்
அந்த பிரேக்கப்புக்கு பிறகு சாகச புகைப்படக் கலைஞர் கோரி டிரான் என்பவரை காதலித்து வந்த ஃப்ரீடா கடந்த 2019ம் ஆண்டு அவருடன் நிச்சயம் செய்துக் கொண்டார். நிச்சயம் செய்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட ஃப்ரீடாவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
கல்யாணம் ஆகாமலே கர்ப்பம்
நடிகை எமி ஜாக்சனை போலவே இவரும் திருமணம் ஆகாமலே கர்ப்பமாகி உள்ளார். தான் கர்ப்பமாகி உள்ள சந்தோஷ செய்தியை தனது காதலரின் பிறந்தநாள் சர்ப்ரைஸாக கூறியுள்ளார் ஃப்ரீடா பின்டோ. மேலும், கர்ப்பவதியாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.
குவிகிறது வாழ்த்து
உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை ஃப்ரீடா பின்டோவுக்கும் அவரது காதலர் கோரி டிரானுக்கும் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை ஏகப்பட்ட பேர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை ஃப்ரீடாவின் இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் பல லட்ச லைக்குகளையும் அள்ளி வைரலாகி வருகிறது.