twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”.. பிரபல நடிகர் ஷாக் பேச்சு

    இன்னும் ஐந்து வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது என நடிகர் ஆரி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    |

    சென்னை: இன்னும் ஐந்து வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது என நடிகர் ஆரி எச்சரித்துள்ளார்.

    'சுபம் கிரியேஷன்ஸ்' சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்க படத்தொகுப்பு செய்துள்ளார் கணேஷ்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்வி.உதயகுமார், பேரரசு, நடிகர் ஆரி, தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்ட்) கௌரவ செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இருக்கு.. இன்னைக்கு தர்ஷனுக்கு செம ட்ரீட் இருக்கு.. இதை அவர் வாழ்நாள்ல எப்பவுமே மறக்க மாட்டாரு!இருக்கு.. இன்னைக்கு தர்ஷனுக்கு செம ட்ரீட் இருக்கு.. இதை அவர் வாழ்நாள்ல எப்பவுமே மறக்க மாட்டாரு!

    மண்ணின் பிரச்சினை

    மண்ணின் பிரச்சினை

    இந்த விழாவில் நடிகர் ஆரி பேசும்போது, "இதுபோன்ற பட விழாக்களில் இருக்கும் கலகலப்பு கூட தற்போது வரும் பல படங்களில் இருப்பதில்லை என்பதே உண்மை. ‘உங்கள போடணும் சார்' என்கிற படம் எல்லாம் வரும்போது, ‘வீராபுரம் 22௦' என்கிற மண்ணின் பிரச்சனையை, மக்கள் பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ள இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும்.

    தியேட்டர் கிடைப்பதில்லை

    தியேட்டர் கிடைப்பதில்லை

    இங்கே படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பது, அதிலும் குறிப்பாக சின்ன படங்களுக்கு மாலைக்காட்சி கிடைப்பது என்றால் மிக கஷ்டமான ஒன்று. பெரிய தயாரிப்பாளர்கள், பணம் இருப்பவர்களிடம் மட்டுமே பணம் சேரும்போது சினிமா நன்றாக இருக்காது.. சிறிய தயாரிப்பாளர்களிடம், உழைப்பவர்களிடம் பணம் சென்று சேரும்போதுதான் இந்த இடத்தில் ஒரு வளர்ச்சி இருக்க முடியும்.

    ஆன்லைன் டிக்கெட்

    ஆன்லைன் டிக்கெட்

    தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் டிக்கெட்டிங் முறையை கொண்டு வருவதாக அரசு அறிவித்திருக்கிறது. அப்படி செய்யும்போதுதான் வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும்.. நடிகர்கள் சம்பளம் பற்றி பல காலமாக பேசிக்கொண்டிருக்கிறோம். எல்லா நடிகர்களும் தங்களது சம்பளத்தை வெளிப்படையாக சொல்லி வாங்கிக்கொள்ள நினைக்கவேண்டும். நான் அப்படித்தான். என்னுடைய தயாரிப்பாளர்கள் என்னுடைய படத்திற்கு என்ன வியாபாரமோ அதற்கான சம்பளத்தை கொடுங்கள் என வெளிப்படையாகவே கூறி விடுகிறேன்..

    இன்னும் 5 வருடங்களில்

    இன்னும் 5 வருடங்களில்

    எனது நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னார், இன்னும் 5 வருடங்களில் இந்த சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்கும் முயற்சிகள் வெகுவாக குறைந்துவிடும். சினிமா இப்போது டிஜிட்டல் மயமாகி விட்டதால் வீட்டிலிருந்தபடியே அமேசான், நெட்பிளிக்ஸ ஆகியவற்றின் மூலம் குறைந்த கட்டணத்தில் வீட்டிலேயே ஒரு தியேட்டர் உருவாகும் சூழல் வந்துவிட்டது.

    புதிய கதைகள்

    புதிய கதைகள்

    இந்த மாதிரியான வியாபார முறைகளால் சினிமா வளமாகத்தான் இருக்கும். ஆனாலும் அதன் பலன்கள் தயாரிப்பாளருக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை.. அதனால் அடுத்து நல்ல கதையை, புதிய கதைக்களங்களை, இன்றைக்குள்ள பிரச்சனைகளை மையப்படுத்தி படம் எடுக்க வேண்டும்.

    வழக்கமான பார்முலா

    வழக்கமான பார்முலா

    வழக்கமான பார்முலாவிலேயே படமெடுத்தால் இனிவரும் நாட்களில் அது ஓடுமா என்பது கேள்விக்குறிதான். இப்போது வெப் சீரிஸ்கள் உருவாக ஆரம்பித்து விட்டன. பல இயக்குநர்கள் அதை தேடி செல்கின்றார்கள். அதனால் வரும் நாட்களில் தியேட்டர்கள் இருந்தாலும் தியேட்டர்களை மட்டுமே நம்பி படம் எடுக்கும் சூழல் மாறும். இதனை தியேட்டர் அதிபர்களும் உணரவேண்டும்' என்றார்.

    Read more about: aari ஆரி
    English summary
    While speaking in the audio launch of Veerapuram 220, actor Aari warned that if the industry goes in the same status then after five years there will be no small budget films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X