பொங்கலுக்கு பட்டையை கிளப்ப தயாராகும் சின்ன பட்ஜெட் படங்கள்
சென்னை : பொங்கலுக்கு ரிலீசாக இருந்த வலிமை, ஆர்ஆர்ஆர் படங்கள் கொரோனா பரவல் காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளன.
சசிக்குமார், சதீஷ் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் பட்டையை கிளப்ப தயாராகியுள்ளன.
பொங்கலையொட்டி, கொம்பு வச்ச சிங்கம்டா, நாய் சேகர் உள்ளிட்ட படங்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்க களமிறங்க உள்ளன.

விலகிய பெரிய பட்ஜெட் படங்கள்
பொங்கல், தீபாவளி என்றாலே பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் ரிலீசாக வரிசை கட்டும். இந்த பொங்கலுக்கும் நடிகர் அஜித்தின் வலிமை மற்றும் இயக்குநர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருந்தன.

வரிசை கட்டும் சிறிய பட்ஜெட் படங்கள்
இந்நிலையில் கொரோனா பரவல் மற்றும் அதன் காரணங்களால் திரையரங்குகளில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த படங்களில் ரிலீஸ் தேதி தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த இடங்களில் தற்போது சிறிய பட்ஜெட் படங்கள் வரிசைக்கட்டியுள்ளன.

7 படங்கள் ரிலீஸ்
அந்த வகையில் இந்த பொங்கலுக்கு 7 படங்கள் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளன. முதலாவதாக சசிக்குமார் மற்றும் மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படம் இந்த பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. குடும்ப சென்டிமெண்ட்டுடன் இந்த படம் களமிறங்க உள்ளது.

கொம்பு வச்ச சிங்கம்டா படம்
படத்தை இயக்கியுள்ளார் எஸ்ஆர் பிரபாகரன். படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் சூரி. இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த பொங்கலில் ரசிகர்களை சந்திக்க உள்ளது. அடுத்ததாக பிரபுதேவாவின் நடிப்பில் எமோஷன் காட்சிகளை அதிகமாக கொண்டு இந்த பொங்கலில் ரசிகர்களை சந்திக்க உள்ள படம் தேள்.

தேள் படம்
ஹரிக்குமார் இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்தப்படம் ரிலீசாக உள்ளது. படத்தில் சம்யுக்தா ஹெக்டே பிரபுதேவாவிற்கு ஜோடியாகியுள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அடுத்ததாக விதார்த்தின் நடிப்பில் வெளியாக உள்ள படம் கார்பன்.

விதார்த்தின் 25வது படம்
வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் விதார்த்தின் 25வது படம் இது. படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் தான்யா. அண்ணாதுரை படத்தை இயக்கிய சீனிவாசன் டைரக்ஷனில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான கார்பன் இந்த பொங்கலில் ரிலீசாக உள்ளது.

நாய் சேகர் படம்
அடுத்ததாக சதீஷ் ஹீரோவாக களமிறங்கும் நாய் சேகர் படமும் இந்த பொங்கலில் ரிலீசாக உள்ளது. நாய் மற்றும் மனிதனுக்கு இடையிலான நிகழ்வுகளை கதைக்களமாக கொண்ட இந்தப் படத்தை இயக்கியுள்ளார் கிஷோர். இந்தப் படத்திற்கு மிகுதியான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

என்ன சொல்லப் போகிறாய் படம்
அடுத்ததாக குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடிப்பில் வெளியாக உள்ள படம் என்ன சொல்லப் போகிறாய். இந்தப் படத்தின் பிரமோஷனின்போது வாயை கொடுத்து வாங்கிக் கொண்டார் அஸ்வின். இந்நிலையில் காதலை கதைக்களமாக கொண்டு வெளியாகவுள்ள இந்தப்படமும் பொங்கல் ரேஸில் உள்ளது.


Click it and Unblock the Notifications











