நளினி தலைமையில் பொறுப்பேற்ற சின்னத் திரை நடிகர்கள் சங்க நிர்வாகிகள்

By Shankar

நடிகை நளினியை தலைவராகக் கொண்ட புதிய சின்னத் திரை நடிகர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று பதவி ஏற்றனர்.

சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், ராதாரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென் இந்திய சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் கடந்த மாதம் 12-ந்தேதி நடைபெற்றது. இதில் புதிய தலைவராக நளினி, துணைத் தலைவர்களாக மனோபாலா, ராஜ்காந்த், பொதுச்செயலாளராக பூவிலங்கு மோகன், பொருளாளராக தினகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சங்க உறுப்பினர்களாக நந்தகுமார், குமரேசன், விஜய ஆனந்த், ஆதித்யா, லட்சுமி ராஜா, பிர்லா போஸ், அரவிந்த், நிதீஷ், நவீந்தர், சாந்தி வில்லியம்ஸ், கவுதமி, வினோதினி, ரூபாஸ்ரீ,சந்தோஷி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் முதல் கூட்டம் நேற்று சென்னை மாம்பலத்தில் உள்ள எமரல்ட் மஹாலில், நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் நளினி தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

விழாவில் வெள்ளித்திரை நடிகர்கள் சிவகார்த்திகேயன், தாமு, ராதாரவி மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

Small screen actors association new body takes charge

இதனை தொடர்ந்து நடிகர் ராதாரவி பேசுகையில், சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். நடிகர் தாமு, சின்னத்திரை நடிகர் சங்கத்திற்காக ரூ.1 லட்சத்தையும், நடிகர் ரித்தீஷ் ரூ.5 லட்சத்தையும் நிதி உதவியாக வழங்கினார்கள்.

கூட்டத்தில், உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பொறியியல் கல்லூரியில் இடம் இலவசமாக பெற்றுக்கொடுப்பது போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X