»   »  சின்னத்திரைக் கலைஞர்களைப் போரட்டத்துக்கு தள்ளிய நாகினி!

சின்னத்திரைக் கலைஞர்களைப் போரட்டத்துக்கு தள்ளிய நாகினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மெகா சீரியல்களை என்னதான் ஆண்கள் எதிர்த்தாலும் பெண்கள்தான் தொலைக்காட்சிகளுக்கு முக்கிய ரசிகர்கள் என்பதால் சீரியல்களை ஒழிக்க முடியவில்லை.

ரொம்ப்ப்ப்பத்தான் ஓவராப் போறீங்க... என்று புலம்பும் அளவுக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இப்போது சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர். புதிதாக தமிழ் நேரடி சீரியல்கள் வெர்சஸ் டப்பிங் சீரியல்கள் என்று புதிய யுத்தம் தொடங்கியுள்ளது. பனிப்போரை நேரடி போராக்கிய பெருமை நாகினியையே சாரும்.

Small screen artists fury against Nagini type serials

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் நாகினி டப்பிங் சீரியலுக்கு நல்ல வரவேற்பாம். எனவே அடிபாதாளத்தில் இருந்த தமிழ் நேரடி சீரியல் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை அழைத்த சேனல் நிர்வாகம் ''இன்னும் இரண்டு வாரம் உங்களுக்கு டைம். சீரியல் பிக்கப் ஆகவில்லை என்றால் நிறுத்திவிட்டு

டப்பிங் சீரியல்களை இறக்கிவிடுவோம்'' என்று உறுதியாக சொல்லிவிட்டனராம். இதனால் தான் சின்னத்திரைக் கலைஞர்கள் அவசர அவசரமாக போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். வரும் 14ம் தேதி உண்ணாவிரத அறவழி போராட்டமும் நடத்தவிருக்கிறார்கள்.

English summary
All Small Screen artists have decided to protest against the telecasting of dubbed serials like Nagini.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil