காலா இசை வெளியீட்டு விழா.. வி.ஐ.பி.க்களுக்கு ஸ்மார்ட் கார்டு அழைப்பிதழ்

ரஜினியின் காலா பட இசை வெளியீட்டு விழாவுக்கு ஸ்மார்ட் கார்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Recommended Video

காலா இசை வெளியீட்டு விழா - வீடியோ

சென்னை: ரஜினி நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஸ்மார்ட் கார்ட் வடிவத்தில் அழைப்பிதழ் வழங்கி வருகிறது வுண்டர்பார் நிறுவனம்.

கபாலி படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடிக்கும் படம் காலா. இந்த படத்தை ரஜினியின் மருமகனும், டிகருமான தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கும் இசையத்துள்ளார்.

Smart card invitation for Kaala audio release function

ஏற்கனவே வெளியாகிய 'செம்ம வெயிட்' பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், காலா படத்தின் இசை வெளியீட்டு விழா மே 9ம் தேதி (நாளை), சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்க இருக்கிறது.

இந்த விழாவுக்கு ஏராளமானவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ரஜினி மன்றத்தினரும் பெருமளவில் விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரஜினி தற்போது அரசியலில் இறங்கி உள்ளதால், கட்டுக்கடங்காத கூட்டம் விழாவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை வுண்டர்பார் நிறுவனத்தினர் எடுத்துவருகின்றனர்.

வி.ஐ.பி.க்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டு இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 7 தேதி படம் காலா படம் திரைக்கு வருகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X